Sbs Tamil - Sbs

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • கவிக்கோவின் கவிதைகளுக்கு கவிக்கோ தரும் விளக்கம்

    08/02/2024 Duración: 12min

    உடலால் மறைந்தாலும், தமிழ் கவிதை வாழும்வரை வாழ்வார் எனும் தகமை கொண்ட பெரும் கவிஞர்களில் ஒருவர் கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள். அவர் மறையும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு (2013) சிட்னி வந்திருந்தபோது அவர் தனது கவிதைகள் குறித்து “கவிதையும் கவிஞரும்” தலைப்பில் விளக்கிய ஒலிப்பதிவின் மறுபதிவு. நிகழ்ச்சியாக்கம்: றைசெல். பாகம் - 2.

  • Boost Your Academic Success: Insights from Australian Studies on Achieving Higher Grades in School - பள்ளிக்கூடத்தில் அதிக மதிப்பெண் பெற இதைச் செய்யுங்கள் என்கிறது ஆஸ்திரேலிய ஆய்வு!

    08/02/2024 Duración: 12min

    With the new school year underway, there is now increasing evidence that is linked to greater academic success. The story by Samantha Beniac-Brooks for SBS News, produced by RaySel for SBS Tamil. - நாடு முழுவதும் பள்ளிக்கூடங்கள் திறந்துவிட்டன. புதிய கல்வியாண்டு துவங்கி மாணவர்கள் வெற்றி இலக்கை நிர்ணயிக்கும் வேளை. ஒருவர் எதை செய்தால் நல்ல மதிப்பெண் பெறமுடியும் என்று ஆய்வு ஒன்று யுக்தி ஒன்றை முன்வைக்கிறது. அதை விளக்கும் விவரணம் இது. ஆங்கில மூலம் SBS-News க்காக Samantha Beniac-Brooks. தமிழில் தயாரித்தவர் றைசெல்.

  • Why Interest Rates Persist Amidst Falling Inflation - பணவீக்கம் குறைகிறது ஆனால் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை...ஏன்?

    08/02/2024 Duración: 12min

    In Australia, inflation has risen over the past two years but is currently experiencing a decline. Despite this trend, the Reserve Bank of Australia has opted not to reduce interest rates. Appu Govindarajan, a columnist on economics, a certified public accountant and associated chartered accountant, analyses the correlation between inflation and rate hike. Produced by RaySel. - ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு வருடங்களாக உயர்ந்து வந்த பணவீக்கம் தற்போது குறைந்துவருகிறது. ஆனால் ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கவில்லை. இது குறித்து பெர்த் நகரில் வாழும் கோவிந்தராஜன் அப்பு அவர்கள் விளக்குகிறார். பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து கட்டுரை எழுதும் அவர், ஆஸ்திரேலியாவின் CPA, CA மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக இருப்பதோடு பல ஆண்டுகளாக அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்

  • கைபேசி பாவனையை கண்டுபிடிக்கும் கமரா: கைபேசியே இல்லாதவருக்கு அபராதம்!!

    08/02/2024 Duración: 02min

    NSW மாநிலத்தில் 77 வயதான நபர் ஒருவர் வாகனம் ஓட்டும் போது கைபேசியை பாவித்தார் என கைபேசி பாவனையை கண்டறியும் கமராவில் படம்பிடிக்கப்பட்டதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • Story of our nation – Part 3: First Steps - ஆஸ்திரேலியா என்ற தேசத்தின் கதை – பாகம்3: எப்படியான நாடு?

    08/02/2024 Duración: 08min

    We are bringing the story of Australian political history in ten parts. In the third episode of this series, we examine the first steps Australia took as a federated country. - இந்தத் தேசத்தின் அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகத்தில், ஒரு நாடாக உருவாகிய ஆஸ்திரேலியா எப்படியான நாடாக ஆரம்பித்தது என்று ஆராய்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • புதிய தொழிலாளர் நலச் சட்டம் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேறுகிறது

    08/02/2024 Duración: 05min

    செய்திகள்: 8 பெப்ரவரி 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • Apology: Why "Sorry" Is Not Enough - மன்னிப்பு: வார்த்தை ஒன்று போதுமா?

    07/02/2024 Duración: 12min

    Next week, on Tuesday, February 13th, we commemorate the 16th anniversary of the first-ever apology by an Australian Prime Minister to Indigenous peoples.. - ஒரு ஆஸ்திரேலிய பிரதமர் பூர்வீகக் குடி மக்களிடம் முதன்முறையாக மன்னிப்புக் கேட்டதன் 16வது ஆண்டு நினைவு அடுத்த வாரம், பிப்ரவரி 13ஆம் தேதி செவ்வாய்க் கிழமையாகும்.

  • The JN.1 variant is driving Australia's COVID case spike. How protected are we? - கோவிட் அலை - புதிய திரிபு JN.1 ஏற்படுத்தும் தாக்கம்

    07/02/2024 Duración: 13min

    Health authorities are reporting a surge in COVID-19 cases in some states, driven by a variant called JN.1 which experts say is better at evading our immune system. Dr Rajesh Kannan , working as GP in Selvi talks about the new variant and it's impact with Selvi. - கோவிட் வைரஸின் புதிய JN 1 திரிபு காரணமாக நாட்டில் கோவிட் தொற்று பரவல் மீண்டும் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த புதிய திரிபு கொண்டு வரும் தாக்கம் மற்றும் இதற்கான சிகிச்சை குறித்து சிட்னியில் குடும்ப மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் ராஜேஷ் கண்ணன் அவர்களுடன் உரையாடுகிறார் செல்வி.

  • Your boss could be barred from contacting you after hours under a new bill - பணியிட நேரத்திற்கு வெளியே வேலை செய்ய மறுக்கலாமா?

    07/02/2024 Duración: 09min

    Workers across Australia could soon have a right to disconnect if parliament agrees to reform the Fair Work Act. What is this right and how can it change your life? This feature explains more - பணியிட நேரத்திற்கு வெளியே வேலை செய்ய தொழிலாளர்கள் மறுக்கும் உரிமையை வழங்கும் சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. Fair Work சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள இந்த மாற்றங்கள் குறித்தும் இது குறித்து மக்களின் கருத்துக்களையும் விவரணமாக தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • இலங்கையில் செய்தியாளர்களின் நிலை!

    07/02/2024 Duración: 06min

    இலங்கையில் செய்தியாளராக இருப்பதில் நிலவும் சிக்கல்களையும், பிரச்சனைகளையும் தொகுத்து விவரணமாக முன்வைக்கிறார் நமது யாழ்ப்பாண செய்தியாளர் மதுஸ்ரீ.

  • $80 மில்லியன் போதைப்பொருள் இறக்குமதி - சிட்னியில் இருவர் மீது குற்றச்சாட்டு

    06/02/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 07/02/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • செம்மறி ஆடுகளுக்குப் பயணத்தடை!

    06/02/2024 Duración: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 06/02/2024) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.

  • மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்

    05/02/2024 Duración: 02min

    மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என பக்கிங்ஹாம் அரண்மை செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியை வழங்குகிறார் செல்வி.

  • புதிய எரிபொருள் விதிகள் : ஓட்டுநர்கள் பணத்தை எவ்வாறு சேமிக்க முடியும்?

    05/02/2024 Duración: 02min

    ஆஸ்திரேலியாவின் முன்மொழியப்பட்ட வாகனத் திறன் தரநிலைகள் புதிய கார் வாங்குபவர்களுக்கு அதிக விருப்ப தெரிவுகளை வழங்குவதுடன் சந்தைக்கு மிகவும் மலிவு விலையில் பூஜ்ஜிய உமிழ்வு வாகனங்களை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த செய்தியை முன்வைக்கிறார் செல்வி.

  • How to get Australia Awards scholarship? - Australia Awards என்ற உதவித்தொகை / புலமைப் பரிசு பெறுவது எப்படி?

    05/02/2024 Duración: 16min

    Australia Awards scholarships are prestigious international awards offered by the Australian Government to the next generation of global leaders in developing countries. Through study and research, recipients develop the skills and knowledge to drive change and help build enduring people-to-people links with Australia. - Australia Awards என்ற உதவித்தொகை அல்லது புலமைப் பரிசு, வளரும் நாடுகளிலுள்ள அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்க ஆஸ்திரேலிய அரசு வழங்கும் மதிப்புமிக்க சர்வதேச விருது ஆகும். இந்த விருது பெறுபவர்கள் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மூலம், அவர்களது சொந்த நாட்டில் மாற்றத்தை உண்டாக்குவதற்கான திறன்களையும் அறிவையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.

  • Can actor Vijay make a successful transition into politics? - நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் ‘தமிழக வெற்றி கழகம்’ வெற்றி பெறுமா?

    05/02/2024 Duración: 14min

    The most talked about news in Tamil Nadu this week revolves around the prospects of the recently established political entity, 'Tamizhaka Vetri Kazhagam,' spearheaded by actor Vijay. - தற்போது தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் செய்திகளில் ஒன்றான, நடிகர் விஜய் தொடங்கியுள்ள ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியின் எதிர்காலம் என்ன, நடிகர்களும் பிரபலங்களும் அரசியலில் ஈடுபடுவதன் நோக்கம் என்ன என்ற செய்திகளின் பின்னணியை, சூழலியல் ஆர்வலர், தமிழக எழுத்தாளர், மற்றும் தமிழ்த் திரைப்பட வரலாற்றாளர் தியடோர் பாஸ்கரன் அவர்களுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • தமிழகத்தின் தற்கால நிகழ்வுகள்

    05/02/2024 Duración: 08min

    இந்திய மத்திய பாஜக அரசுக்கு எதிராக லடாக் யூனியன் பிரதேச மக்கள் போராட்டம், ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது, சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இல்லத்தில் என்ஐஏ சோதனை மற்றும் நடிகர் விஜய்யின் புதிய அரசியல் கட்சித் தொடக்கம் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

  • மூன்றாம் கட்ட வரி குறைப்புகளின் மாற்றங்களுக்கு ஆதரவு - கருத்துக்கணிப்பு முடிவுகள்!!

    05/02/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 05/02/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

  • Audiologists: Guardians of Hearing Health and Sound Well-Being - காது நன்கு கேட்கிறதா? கேட்கவில்லையா?

    04/02/2024 Duración: 09min

    Mr. Musthafa, an experienced audiologist with 13 years of global expertise and co-founder of Audience Hearing in Australia, elucidates the significance of having an audiologist for one's hearing health. He highlights the pivotal role they play in identifying, managing, and minimizing the adverse impacts of hearing loss. Produced by RaySel. - காது நன்றாக கேட்காவிட்டாலும் அதை பலரும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் அது பெரும் சிக்கலை உருவாக்கலாம் என்கிறார் ஆடியோலஜிஸ்ட் முஸ்தபா அவர்கள். 13 ஆண்டுகால உலகளாவிய நிபுணத்துவம் கொண்ட, அனுபவம் வாய்ந்த ஆடியோலஜிஸ்ட்டாக பணியாரும் அவர் சிட்னியில் இயங்கும் Audience Hearing in Australiaவின் இணை நிறுவனர். ஒருவரின் ஆரோக்கியமான செவிப்புலனுக்கு ஆடியோலஜிஸ்ட் சேவையின் முக்கியத்துவம் என்ன என்று விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

  • Medicareஇன் புதிய அட்டையை பெற விரும்புகின்றீர்களா?

    04/02/2024 Duración: 01min

    ஆஸ்திரேலியாவின் Medicare - மருத்துவ காப்பீட்டின் 40வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் புதிய அட்டையை அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியை முன்வைக்கிறார் றைசெல்.

página 23 de 25