Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 63:28:43
  • Mas informaciones

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • ஆஸ்திரேலியாவின் கடைசி "duel" சண்டை செப்டம்பர் 27, 1851

    27/09/2024 Duración: 03min

    பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், குலசேகரம் சஞ்சயன்.

  • ஆஸ்திரேலியாவின் எந்த பகுதிகளில் வீடுகளின் விலைகள் குறைகின்றன?

    26/09/2024 Duración: 02min

    ஆஸ்திரேலியாவின் கிட்டத்தட்ட 30 சதவீத suburbsஇலுள்ள வீடுகளின் மதிப்பு ஆகஸ்ட் வரையான கடந்த மூன்று மாதங்களில் குறைந்துள்ளதாக CoreLogicஆல் பகுப்பாய்வு செய்யப்பட்ட தரவுகள் கூறுகின்றன. இது குறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • 2025இல் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் எத்தனை புதிய சர்வதேச மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்

    26/09/2024 Duración: 02min

    2025 ஆம் ஆண்டில் சர்வதேச மாணவர் சேர்க்கைக்கான வரம்பு 270,000 ஆக அரசு நிர்ணயித்துள்ள பின்னணியில், சில முக்கிய பல்கலைக்கழகங்களில் 2025 இல் எத்தனை புதிய சர்வதேச மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற உத்தேச எண்ணிக்கை குறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • சூப்பர் மார்க்கெட் விளம்பரப்படுத்தும் தள்ளுபடி உண்மையான தள்ளுபடி விலையா?

    26/09/2024 Duración: 08min

    Australian Consumer and Competition Commission Coles மற்றும் Woolworths நிறுவனங்கள் ஆஸ்திரேலிய நுகர்வோர் சட்டத்தை மீறியதாக குற்றஞ்சாட்டி அந்நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே Coles மற்றும் Woolworths குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் என்ன வகையான அபராதம் எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பெரிய நிறுவனங்களை பொறுப்புக்கூற வைப்பதில் நுகர்வோர் என்ன பங்கு வகிக்க முடியும்? என்பதனை விளக்குகிறது இந்த விவரணம். ஆங்கிலத்தில் Catriona Stirrat எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

  • அகதிகளுக்கான புதிய மீளாய்வு தீர்ப்பாயம் - அரசின் சட்டமுன்வடிவு மாற்றத்தினால் பாதிப்பு என்ன?

    26/09/2024 Duración: 08min

    ஆளும் லேபர் அரசு கொண்டுவரவுள்ள Administrative Review Tribunal ART அமைப்பதற்கான சட்டமுன்வடிவில் சில மாற்றங்களை அரசு கொண்டுவந்துள்ளது பலரின் விமர்சனங்களை பெற்று வருகின்றன. இது புகலிடக் கோரிக்கையாளர்களை நியாயமற்ற முறையில் நடத்துவதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அகதிகளின் செயற்பாட்டாளரான கலாநிதி பாலா விக்னேஸ்வரன் அவர்களுடன் உரையாடி செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை வழங்குகிறார் செல்வி.

  • Tamil archeological finds by a school teacher ! - தமிழர் பண்பாட்டு அடையாளங்களைத் தோண்டும் (தேடும்) ஆசிரியர்

    26/09/2024 Duración: 24min

    An enthisiastic teacher and his friends are involved in Archaeological Research in Pudukkottai. Kulasegaram Sanchayan, talks to the founder, Manikandan about his activities. - புதுக்கோட்டையில் பண்டைக்கால இரும்பு உருக்காலை இயங்கியதற்கான தடயங்கள், உலோக உருக்கு சுடுமண் குழாய்கள், மண்ணாலான உருக்கு உலைகள், உருக்குக் கலன்கள் ஆகியவை இருப்பதாக புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தினர் சொல்கிறார்கள். இதுகுறித்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன் அவர்களுடன் குலசேகரம் சஞ்சயன் உரையாடுகிறார்.

  • முதியோர் எதிர்கொள்ளும் வருமான சுரண்டல் : தடுப்பது எப்படி?

    26/09/2024 Duración: 12min

    Elders Financial Abuse - முதியோர் வருமான சுரண்டல் என்றால் என்ன? இதற்கான சட்ட உதவிகளை எங்கு பெற்றுக்கொள்ளலாம்? இது போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த விவரணம். தயாரித்து முன் வைக்கிறார் செல்வி.

  • நாட்டின் பொருளாதார வளர்ச்சி சராசரியை விட குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

    26/09/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 26/09/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

  • இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.... புதிய தேர்தல் எப்போது?

    25/09/2024 Duración: 10min

    இலங்கையில் கடந்த சில நாட்களில் இடம்பெற்ற முக்கிய செய்திகளின் பின்னணி.

  • உதயா: பூர்வீகக் குடிமக்களுடன் இணைந்து செயற்படும் தமிழ்ப்பெண்

    25/09/2024 Duración: 12min

    மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Djukun பூர்வீகக்குடி மக்களுடனான உறவு மற்றும் அந்த சமூகத்துடன் இணைந்து கலாச்சார குணப்படுத்துதல் மறுமலர்ச்சியை நோக்கிய அவரது பகிரப்பட்ட பயணத்தை மையமாகக் கொண்டு, பூர்வீகக் குடி பின்னணி கொண்ட பெண்களுக்கிடையேயான பிணைப்பை எடுத்துக்காட்டும் தனது நினைவுக் குறிப்பை எழுதிய உதயா சண்முகம் என்ற ஆர்வலரை நேர்காணல் செய்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • ஐவரைப் பலிகொண்ட Daylesford விபத்து: ஓட்டுநர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பு

    25/09/2024 Duración: 06min

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விக்டோரியாவின் Daylesford பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இந்தியப்பின்னணிகொண்ட ஐவர் கொல்லப்பட்டிருந்தநிலையில் இவ்விபத்திற்குக் காரணமான ஓட்டுநர் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இலங்கையின் புதிய அதிபர் இந்தியாவுக்கு சவாலா?

    25/09/2024 Duración: 12min

    இலங்கையின் புதிய அதிபர் இந்தியாவுக்கு சவாலா என்ற ஓர் அலசலுடனும் இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் தொடரும் ஆயுத பதற்றம் பற்றிய சிறு பார்வையுடனும் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • சிட்னியின் நாளைய வெப்பநிலை 20 செல்சியஸ் வரை குறையும் என எதிர்பார்ப்பு

    24/09/2024 Duración: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 25/09/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • நாட்டின் வட்டி வீதத்தில் மாற்றமில்லை - Reserve வங்கி அறிவிப்பு!

    24/09/2024 Duración: 02min

    ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் 4.35 என்ற அளவிலேயே தொடர்ந்தும் பேணப்படும் என ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Can we fight misinformation without threatening our freedom of speech? - SBS Examines : நமது பேச்சு சுதந்திரத்தை பாதிக்காமல் தவறான தகவல்களை எதிர்த்து போராட முடியுமா?

    24/09/2024 Duración: 06min

    There are calls to crack down on the sharing of misinformation online. But would this be an attack on free speech? - பேச்சு சுதந்திரம் - ஆஸ்திரேலியாவில் வெளிப்படையாகப் பாதுகாக்கப்படாவிட்டாலும், இது ஒரு அடிப்படை மனித உரிமை.

  • இலங்கையின் பிரதமர் தினேஷ் குணவர்தன பதவி விலகல்

    23/09/2024 Duración: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 24/09/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

    23/09/2024 Duración: 09min

    திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல், பணிச்சுமையால் இளம் பெண் மரணம் - விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு உறுதி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடும், அதை தொடரும் அரசியல் சர்ச்சைகளும் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • ‘வீட்டுப் பிரச்சனை’ நாடாளுமன்றத்தைக் கலைக்கும்வரை செல்லுமா?

    23/09/2024 Duración: 10min

    நாட்டிலுள்ள ‘வீட்டு' பிரச்சனையைத் தீர்ப்பதற்காக அரசு எடுக்கும் முயற்சிகள் போதாது என்று Greens கட்சியினரும், அரசு தவறான தீர்வை மக்கள் மீது திணிக்கிறது என்று Coalition எதிர்க் கட்சிகளும் குற்றம் சாட்டுவதால் இது குறித்த சட்ட முன்வரைவுகளை நாடாளுமன்றத்தில் தீர்ப்பதற்கு அரசின் முயற்சிகள் தோல்வி கண்டு வருகின்றன.

  • இலங்கையின் புதிய அதிபர் அநுர குமார திஸாநாயக்க நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவாரா?

    23/09/2024 Duración: 12min

    கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவரும் இலங்கையில் நடந்த அதிபருக்கான தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க அதிபராகத் தேர்வாகியுள்ளார்.

  • இலங்கையின் அடுத்த அதிபராக அநுர குமார திஸாநாயக்க இன்று பதவியேற்கிறார்

    23/09/2024 Duración: 05min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 23/09/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

página 16 de 25