Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
பெட்ரோல் விலை உயர்வு: வாகன ஓட்டிகள் பணத்தை எப்படி சேமிக்கலாம்?
17/03/2026 Duración: 02minநாட்டின் பல பகுதிகளில் பெட்ரோலின் சராசரி விலை லிட்டருக்கு 2 டாலரைத் தாண்டியுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் எப்படி சேமிக்கலாம்? இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
நாட்டின் வட்டி வீதம் மீண்டும் உயர்ந்தது!
17/03/2026 Duración: 02minஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
NSW Health வழங்கும் மொழிபெயர்த்துரைப்பாளர் புலமைப்பரிசில் திட்டம்
16/03/2026 Duración: 02minNSW Health மொழிபெயர்த்துரைப்பாளர் புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
வெளிநாடு செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கான புதிய பயண எச்சரிக்கை
16/03/2026 Duración: 02minமத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு ஆஸ்திரேலியர்களுக்கான பயண எச்சரிக்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆழ்ந்த மனித நேயத்துடன் இரத்த தானம் செய்யும் AIMA
16/03/2026 Duración: 14minஆஸ்திரேலிய இஸ்லாமிய மருத்துவ சங்கம் (Australian Islamic Medical Association – AIMA) பல ஆண்டுகளாக இரத்ததான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக Bondi பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் AIMA நடத்திய சிறப்பு இரத்ததான சேவை ஆஸ்திரேலியா முழுவதும் பரவலாக கவனம் பெற்றது. ரமலான் காலத்தில், தானமும் சமூகச் சேவையும் அதிகமாக வலியுறுத்தப்படும் நிலையில், AIMA அமைப்பின் சமூகப் பணிகள் குறித்து அதன் தலைவர் டாக்டர் ஓமர் ஷரீஃப் விளக்குகிறார். மேலும், AIMA முன்னெடுத்த முயற்சியின் மூலம் இரத்ததானம் செய்த தனது அனுபவத்தை டாக்டர் நூர் சுஹானா மொஹ்ட் அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்.
-
இன்றைய செய்திகள்: 16 மார்ச் 2026 - திங்கட்கிழமை
16/03/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 16/03/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
More than style: How First Nations fashion is growing in Australia - பூர்வீகக் குடிமக்களின் Fashion: ஆஸ்திரேலிய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு
15/03/2026 Duración: 09minIf you’ve spent any time in Australia, you’ve probably noticed how relaxed the style is. You might notice activewear, surf brands and casual clothes everywhere. But there’s another side to Australian fashion. Aboriginal and Torres Strait Islander designers have been creating clothes and accessories for thousands of years — and that work is very much alive today. You’ll see it on runways, in global fashion campaigns and in everyday clothing. Find out what makes First Nations fashion different, how it connects to the environment and what you should be aware of if you want to wear it. - நீங்கள் ஆஸ்திரேலியாவில் சில காலம் வாழ்ந்திருந்தால், இங்குள்ள உடை அலங்கார பாணி மிகவும் சுலபமானதும் சீரானதுமாக இருப்பதை கவனித்திருக்கலாம். பல இடங்களில் activewear, surf brands மற்றும் சாதாரண உடைகளை அதிகமாக பார்த்திருப்பீர்கள். ஆனால் ஆஸ்திரேலிய ஃபேஷனின் இன்னொரு பக்கம் உள்ளது — பலர் முதலில் இங்கு வரும்போது அதைப் பற்றி அதிகமாகக் கேள்விப்படமாட்டார்கள். அபோரிஜினல் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுப் பின்னணிகொண்ட வடிவமைப்பாளர்கள் ஆயிரக்கணக்க
-
கொழும்பு – மெல்பன் விமான சேவைகளை விரிவுபடுத்தும் SriLankan Airlines
15/03/2026 Duración: 02minகொழும்பு – மெல்பன் இடையிலான விமானசேவைகளை அதிகரிக்கவுள்ளதாக SriLankan Airlines அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (8 – 14 மார்ச் 2026)
13/03/2026 Duración: 08minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (8 – 14 மார்ச் 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
-
செய்தியின் பின்னணி : தற்காலிக விசா தொடர்பில் அரசு திட்டமிடும் புதிய கட்டுப்பாடுகள்
13/03/2026 Duración: 07minஉள்துறை அமைச்சருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் புதிய குடிவரவு சட்ட முன்வரைவு, மனிதாபிமான மதிப்புகளுக்கும் அகதி பாதுகாப்பு கொள்கைகளுக்கும் எதிராக இருப்பதாக கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
-
தமிழ்த் தடம்: கபிலர்
13/03/2026 Duración: 05minதமிழ் இலக்கிய மரபில் கபிலரின் பங்களிப்பு குறித்து விளக்குகிறார் தனபாலசிங்கம் அவர்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு : றைசல்
-
செய்தியின் பின்னணி: விமானக் கட்டணங்கள் ஏன் மீண்டும் உயர்கின்றன?
13/03/2026 Duración: 09minஆஸ்திரேலியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு மட்டுமல்ல பிற நாடுகளுக்குச் செல்வதற்கான விமானக் கட்டணங்கள் மீண்டும் உயரக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இன்றைய செய்திகள்: 13 மார்ச் 2026 - வெள்ளிக்கிழமை
13/03/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 13/03/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
-
உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் மெல்பன் முதலிடம்!
13/03/2026 Duración: 02minபுதிய தரவரிசைப் பட்டியல் ஒன்றில் மெல்பன் நகரம் உலகின் சிறந்த நகரமாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
பெட்ரோல் விலையை உயரச் செய்யும் ஹோர்முஸ் நீரிணையின் பின்னணி என்ன?
12/03/2026 Duración: 08minமத்தியகிழக்கில் மோதல்கள் தீவிரமடைந்துவரும் நிலையில் ஈரான் நாட்டுக்குக்கு மிக அருகில் உள்ள ஹோர்முஸ் நீரிணை (Straight of Hormuz) வழியாகவே பெட்ரோலிய எண்ணெயை ஏற்றிவரச் செல்லும் வெளிநாட்டுக் கப்பல்கள் பாரசீக வளைகுடாவிற்குள் நுழையமுடியும் என்பதால் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. இந்த பின்னணியில் ஹோர்முஸ் நீரிணையின் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
-
ஆஸ்திரேலிய உணவுகளின் பின்னணியில் இருக்கும் கதைகள் தெரியுமா?
12/03/2026 Duración: 09minஆஸ்திரேலியாவின் தனித்துவ உணவுகளாக லாமிங்டன், வெஜிமைட், மீட் பை, பாவ்லோவா என்று நம்மிடமும் ஏராளம் உண்டு. அவற்றின் பின்னால் ஏராளமான கதைகளும் உண்டு. அவைகளை தனக்கே உரித்தான சுவையாக கதை சொல்லும் பாணியில் “நம்ம ஆஸ்திரேலியா” என்ற நிகழ்ச்சிவழி முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
-
பாம்புப் பெண் & சிலந்திப் பெண்
12/03/2026 Duración: 12minகரப்பான் பூச்சி, பல்லி இதையெல்லாம் பார்த்துவிட்டால்கூட 'ஆ...' என்று அலறிக் குதித்து களேபரம் செய்யும் பெண்கள் மத்தியில் சிலந்தியை வருடக்கணக்கில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார் தேனி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயனி மற்றும் தஞ்சாவூர் சந்தியா தங்களது ஊருக்குள் வரும் பாம்பை மீட்டு அப்புறப்படுத்தி காட்டுப் பகுதியில் கொண்டு விடுவதை பொழுதுபோக்காக செய்து வருகிறார். இவர்களின் அனுபவங்களை விவரிக்கும் விவரணம். தயாரித்துத் வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.
-
செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலியாவில் ஊழியர்களுக்கு ஐந்து வார Annual Leave கோரிக்கை வலுக்கிறது
12/03/2026 Duración: 07minஆஸ்திரேலியாவில் தற்போது ஆண்டுக்கு நான்கு வாரங்கள் Annual Leave வழங்கப்படுகிறது. ஆனால் ஐந்து வாரங்கள் Annual Leave தரப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்கள் தற்போது அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
-
தைராய்ட் பிரச்சினைக்கு என்னென்ன சிகிச்சைகள் உள்ளன?
12/03/2026 Duración: 12minநமது தொண்டையிலுள்ள தைராய்ட் சுரப்பியுடன் தொடர்புடையதாக ஏற்படும் நோய் நிலைமைகளில் ஒன்று hyperthyroidism ஆகும். இது ஏன் ஏற்படுகிறது, இது ஏற்படாமல் தடுக்க முடியுமா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்குப் பதில் தருகிறார் மெல்பனைச் சேர்ந்த குடும்ப மருத்துவர் நளிமுடீன் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 12 மார்ச் 2026 - வியாழக்கிழமை
11/03/2026 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 12/03/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.