Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
PCOS மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு : பெண்கள் கவனிக்க வேண்டியது என்ன?
23/03/2026 Duración: 12minHormonal Imbalance என்ற நிலைமையால் நம்மில் பலர் அவதிப்படக்கூடும். இது ஏன் ஏற்படுகிறது என்பது தொடர்பிலும் குறிப்பாக உடல்பருமனுடன் தொடர்புடைய Hormonal Imbalance குறித்தும் விளக்கமளிக்கிறார் Endocrinologist Felix Jebasingh அவர்கள். அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 23 மார்ச் 2026 - திங்கட்கிழமை
23/03/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 23/03/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
ரோடா ராபர்ட்ஸ் AO: தேசத்தை மாற்றிய பண்பாட்டு போராளி
22/03/2026 Duración: 13minSBS-இன் Elder-in-Residence ஆகவும், ஆஸ்திரேலியாவின் பூர்வீக மக்களின் கலை மற்றும் பண்பாட்டு உலகின் முக்கிய முன்னோடியுமான Rhoda Roberts AO, 66 வயதில் சனிக்கிழமை காலமானார். எழுத்தாளர், நடிகை, இயக்குநர், கலைத் தயாரிப்பாளர், கலாசார வழிகாட்டி என்று பல துறைகளில் தடம் பதித்த அவர், பூர்வீக மக்களின் குரல்களை தேசிய அளவில் ஒலிக்கச் செய்த ஆளுமையாகப் போற்றப்படுகிறார். ஆஸ்திரேலியாவின் கலை மற்றும் பண்பாட்டு வாழ்வில் அழியாத தடம் பதித்த அவரது வாழ்க்கையையும் சாதனைகளையும் இந்த விவரணம் பதிவு செய்கிறது.
-
செய்தியின் பின்னணி : எரிபொருள் சிக்கலை சமாளிக்க அரசின் புதிய திட்டம்
21/03/2026 Duración: 07minஎரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய தேசிய பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளதாக கடந்த வாரம் பிரதமர் Anthony Albanese அறிவித்தார். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (15 – 21 மார்ச் 2026)
21/03/2026 Duración: 05minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (15 – 21 மார்ச் 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
-
மகிழ்ச்சியான நாடுகள் வரிசையில் ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை எத்தனையாவது இடம்?
20/03/2026 Duración: 02minஉலகளாவிய ரீதியில் மகிழ்ச்சியான நாடுகள் எவை என்ற புதிய பட்டியல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
‘ஆதரவற்றவர்களை அவர்கள் மதத்தின்படி அடக்கம் செய்வதே உயர்ந்த மனித நேயம்’
20/03/2026 Duración: 12minஅமீர் அம்சா அவர்கள் உயர்ந்த மனித நேயத்தின் அடையாளம். மதங்களின் பெயரால் மனிதகுலம் பிளவுபடும் போக்கு அதிகரித்திருக்கும் நிலையில், தமிழநாட்டில் ஆதரவற்ற நிலையில் மரணிக்கும் மனிதர்களை கடந்த 28 ஆண்டுகளாக அவர்களின் மத வழக்கப்படி நல்லடக்கம் செய்துவருகின்றனர் அமீர் அம்சாவும் அவரின் நண்பர்களும். இந்த சேவையை பாராட்டி தமிழக அரசு மற்றும் “விகடன்” விருதுகள் வழங்கி பாராட்டியுள்ளன. ரமலான் பெருவிழா வேளையில் அமீர் அம்சா அவர்களை சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.
-
30 ஆண்டு fixed-rate வீட்டு கடன் – குடும்பங்களுக்கு நிம்மதியாகுமா?
20/03/2026 Duración: 07minஆஸ்திரேலியாவில் வீட்டு கடன் அமைப்பு பல குடும்பங்களுக்கு நிதி நிச்சயமின்மையை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், 30 ஆண்டுகால நிலையான வட்டிக் கடன்கள் அறிமுகமாக வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இன்றைய செய்திகள்: 20 மார்ச் 2026 - வெள்ளிக்கிழமை
20/03/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 20/03/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
-
உணர்வுகளை இணைக்கும் மொழி!
19/03/2026 Duración: 13min'உலக கவிதை தினம்' ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ம் திகதி கொண்டாடப்படுகிறது. இத்தினத்தையொட்டிய சிறப்பு நிகழ்ச்சி. இதில் பங்கேற்பவர்கள் சத்யா நிரஞ்சன், மோஷிகா பிரேமதாச, பகீரதன் தேவேந்திரன் மற்றும் கேதா ஆகியோர். நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா துரைசிங்கம். இந்நிகழ்ச்சி ஒரு மறுஒலிபரப்பு.
-
புகைப்படக்கலையில் கலக்கும் சிறுமி சிதாரா!
19/03/2026 Duración: 08minதமிழ்நாட்டை சேர்ந்த சிதாரா அருள் கார்த்திகேயன் வனவிலங்கு புகைப்படக்கலையில் சர்வதேச அளவில் அசத்தி வருகிறார். சிதாராவின் புகைப்படக்கலை பயணம் குறித்த விவரணம், தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.
-
செய்தியின் பின்னணி: எந்த இடத்தில் Unit வாங்குவது வாடகைக்கு இருப்பதைவிட மலிவானது?
19/03/2026 Duración: 06minஇந்த நகரத்தில் Unit ஒன்றை வாங்குவது வாடகைக்கு இருப்பதை விட மலிவாக இருக்கக்கூடும் என புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலியாவின் தேசிய மலராக வாட்டில் மலர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?
19/03/2026 Duración: 10minஒவ்வொரு நாடும், மாநிலங்களும் தங்களுக்கென்று கொடி, விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, மரம், பூ என பல தனித்த, தனித்துவ அடையாளங்களைத் தக்கவைத்திருக்கின்றன. ஆஸ்திரேலியாவின் coat of arms-ல் இடம் பெற்றிருக்கும் கோல்டன் வாட்டில் மலர் ஏன் தெரிவு செய்யப்பட்டது? “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி வழி விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
-
இன்றைய செய்திகள்: 19 மார்ச் 2026 வியாழக்கிழமை
19/03/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 19/03/2026) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.
-
ஆஸ்திரேலியா ஏன் பெட்ரோல் சிக்கலை எதிர்கொள்கிறது? சமாளிக்குமா?
18/03/2026 Duración: 12minநாட்டில் பெட்ரோல் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியா பெட்ரோல் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்படலாம் என்று சிலர் அஞ்சுகின்றனர். இந்த நிலையில் பெட்ரோல் சிக்கலை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியா இந்த சிக்கலை சமாளிக்குமா என்று ஊடகங்கள் தரும் தகவல்களை தொகுத்தளிக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
-
குடிவரவு தடுப்புக் காவல்: ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
18/03/2026 Duración: 02minகாலவரையற்ற குடிவரவு தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களை கண்காணிக்க அரசு கொண்டு வந்த புதிய நடவடிக்கைகளை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
செய்தியின் பின்னணி: தெற்கு ஆஸ்திரேலிய தேர்தல் களம்: சனிக்கிழமை வெற்றி யாருக்கு?
18/03/2026 Duración: 13minதெற்கு ஆஸ்திரேலிய மாநிலத் தேர்தல் மார்ச் மாதம் 21 ஆம் தேதி எதிர் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கட்சிகள் முன்வைக்கும் வாக்குறுதிகள் என்ன, மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சி. முன்வைக்கிறார் றைசெல்.
-
ரமலான் & ஆஸ்திரேலியாவில் மேலோங்கும் Islamophobia: இளம் முஸ்லீம்களின் பார்வை
18/03/2026 Duración: 17minஉலகெங்கும் ரமலான் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் பின்னணியில் ரமலான் விழா குறித்தும், ரமலான் விழாவை எப்படி கொண்டாடுகின்றோம் என்றும், ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வளர்ந்துவரும் வெறுப்பு குறித்தும் இளைய தலைமுறை முஸ்லிம்கள் கலந்துரையாடுகின்றனர். பங்கேற்றவர்கள்: மொகமட் ரேஹான் (Melbourne) சாதியா ஷரீஃப் (Townsville, நஜீத் ரஹ்மான் (Melbourne), ஹலீமா அஃப்ரீன் ( Melbourne) & மஹதீயா காலீத் (Sydney). நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
-
இலங்கை: எரிபொருள் நெருக்கடிக்கு அரசு வழங்கும் தீர்வுகள் என்ன?
18/03/2026 Duración: 08minஇலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் பங்கீட்டு முறை மூலம் எரிபொருள் வழங்கல், வாராந்தம் புதன்கிழமை அரச விடுமுறை என்று அரசு பல திட்டங்களை முன்வைத்துள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
இன்றைய செய்திகள்: 18 மார்ச் 2026, புதன்கிழமை.
18/03/2026 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 18/03/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.