Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
உலக மேடையில் இந்திய குரல்: FIFA உதவி நடுவர் டோனி ஜோசப் லூயிஸ்
27/03/2026 Duración: 14minடோனி ஜோசப் லூயிஸ் அவர்கள், 2016 முதல் சர்வதேச அளவில் திறமையான FIFA உதவி நடுவராக பணியாற்றிவருகிறார். துல்லியமான முடிவுகள் மற்றும் நிலையான செயல்திறன் மூலம் பல சர்வதேச போட்டிகளில் பணியாற்றி, உலக கால்பந்து சமுதாயத்தில் தன்னுடைய இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார். அவரது பயணம், அர்ப்பணிப்பு, கட்டுப்பாடு மற்றும் விளையாட்டின் மீது கொண்ட ஆழ்ந்த ஆர்வம் போன்ற பல விடயங்களை அவர் எம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
தமிழ்த் தடம்: ஒளவையார்கள்
27/03/2026 Duración: 05minதமிழ் இலக்கிய மரபில் ஔவையார்களின் பங்களிப்புகள் குறித்த தகவலை முன்வைக்கிறார் தனபாலசிங்கம் அவர்கள்.
-
செய்தியின் பின்னணி: E10, E15, E20 போன்ற எதனோல் எரிபொருள்: மலிவான மாற்றுத் தீர்வா?
27/03/2026 Duración: 06minஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை பொதுமக்களுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது. இதற்கான மாற்றுத் தீர்வாக எதனோல் கலந்த பெட்ரோல் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் இது உண்மையில் பெட்ரோல் விலையைக் குறைக்குமா என்பதே தற்போது முக்கியமான கேள்வியாக உள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இன்றைய செய்திகள்: 27 மார்ச் 2026 - வெள்ளிக்கிழமை
26/03/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 27/03/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
ஆஸ்திரேலியா அறிவோம்: Tasmania, பெருந்தீவில் ஒரு குட்டித் தீவு!
26/03/2026 Duración: 09minஆஸ்திரேலியாவின் ஒரே தீவு மாநிலம் டாஸ்மேனியா. இலங்கையை விடவும் சற்றே பெரிய தீவான டாஸ்மேனியா சுமார் 64,000 சதுர கி.மீ. பரப்பளவுடன் உலகின் 26-வது பெரிய தீவாக உள்ளது. இந்த தீவின் வரலாற்றை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
-
விக்டோரியாவில் இடம்பெற்ற விபத்தில் இந்திய இளைஞர் மரணம்
26/03/2026 Duración: 02minவிக்டோரியாவின் Bendigo அருகில் இடம்பெற்ற விபத்தில் இந்திய பின்னணி கொண்ட இளைஞர் மரணமடைந்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
விக்டோரியர்களுக்கு தினமும் மூன்று மணி நேரம் இலவச மின்சாரம்!
26/03/2026 Duración: 02minவிக்டோரியாவில், வாரத்தின் ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கும் புதிய திட்டம் விரைவில் அறிமுகமாகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
"மறு சுழற்சி தமிழருக்குப் புதிதல்ல!"
26/03/2026 Duración: 15minவிக்டோரியா மாநிலத்தில் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஒரு செயற்பாடாக, விக்டோரியா மாநில அரசு 2019ஆம் ஆண்டு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அது குறித்து விமர்சனம் செய்த RMIT பல்கலைக்கழக பேராசிரியர் உஷா ஐயர்-ரானிகா, தமிழருக்கு இது புதிய விடயம் இல்லை என்று எம்மிடம் அப்போது கூறியிருந்தார். 2019ஆம் ஆண்டு அவரை நேர்கண்டவர் குலசேகரம் சஞ்சயன். இது ஒரு மறு ஒலிபரப்பு
-
செய்தியின் பின்னணி: பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க, வீட்டிலிருந்து வேலை செய்யலாமா?
26/03/2026 Duración: 10min“முடியுமானால், வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள்” என்ற ஆலோசனை பிறப்பதற்குக் காரணங்களாக அதிகரித்து வரும் பெட்ரோல் விலை, தேவையை சமாளிக்க முடியாத பெட்ரோல் விநியோகம் இரண்டும் கூறப்படுகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
நீரிழிவால் கண்ணில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது எப்படி?
26/03/2026 Duración: 07minநீரிழிவு உள்ளவர்களை பாதிக்கும் பல நோய்களில் Diabetic retinopathy யும் ஒன்று. Diabetic retinopathy பற்றியும் அதை எப்படி தடுக்கலாம் என்பது பற்றியும் விளக்கமளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 26 மார்ச் 2026 - வியாழக்கிழமை
25/03/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 26/03/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
மார்ச் 21: உலக டவுன் சிண்ட்ரோம் தினம். நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை எவை?
25/03/2026 Duración: 17minமார்ச் 21 உலக டவுன் சிண்ட்ரோம் தினமாகும் (World Down Syndrome Day). டவுன் சிண்ட்ரோம் பற்றி, சிட்னியைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் மித்திரன் குமாரசாமி எம்முடன் பேசுகிறார். இந்நிலையில் உள்ள குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்களுக்குக் கிடைக்கும் ஆதரவு சேவைகள் மற்றும் உதவியை எங்கு நாடலாம் என்பது குறித்தும் அவர் எடுத்துரைக்கிறார். அவருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இன்றைய செய்திகள்: 25 மார்ச் 2026, புதன்கிழமை.
25/03/2026 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 25/03/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
செய்தியின் பின்னணி:குடிவரவுக்கு எதிரான One Nation கட்சியின் தெற்கு ஆஸ்திரேலிய தேர்தல் வெற்றி காட்டுவது என்ன
24/03/2026 Duración: 06minதெற்கு ஆஸ்திரேலியத் தேர்தல் முடிவு, அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. லேபருக்கு எதிரான முதன்மை மாற்று சக்தியாக இருந்த லிபரல் கட்சியை பின்னுக்குத் தள்ளி, One Nation கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இது குறித்து SBS News-க்காக ஆங்கிலத்தில் Briana Charles எழுதிய விவரணத்தை அடிப்படையாக கொண்டு செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் றேனுகா துரைசிங்கம்
-
இலங்கை: முன்னாள் போராளிகளின் பங்களிப்பை வலுப்படுத்தும் மாநாடு
24/03/2026 Duración: 08minபோராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் “சமகால அரசியலும் - போராளிகளின் வகிபாகமும்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த மாநாடு அரசியல் மாற்றங்கள், சமூக அபிவிருத்தியில் முன்னாள் போராளிகளின் பங்களிப்பை வலுப்படுத்துவதை நோக்காக கொண்டிருந்தது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
இப்போது வெளிநாட்டுப் பயணம் போகின்றவர்கள் எதில் கவனமாக இருக்க வேண்டும்?
24/03/2026 Duración: 12minஉலகில் நிலவும் போர் சூழலில், வெளிநாடு செல்லும் பயணிகள் எத்தகைய முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும், ஒருவரின் பயணத் திட்டங்கள் எவ்வாறு பாதிக்கப்படக்கூடும் என்பதை விளக்குகிறார் குரு சந்தர் அவர்கள். சிட்னியை மையமாகக் கொண்டு இயங்கும் Madura Travels Australia நிறுவனத்தின் துணைத் தலைவரும், பயணத் துறையில் பல ஆண்டுகள் அனுபவமுள்ளவருமான குரு அவர்களோடு உரையாடுகிறார் றைசெல். ——————————————————————————————————————————— இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-
ஊதிய உயர்வு கோரிக்கை: லட்சக்கணக்கானோருக்கு ஆண்டுக்கு $2,465 கூடுதலாக கிடைக்கலாம்
24/03/2026 Duración: 02minஆஸ்திரேலியாவில் சுமார் 30 லட்சம் தொழிலாளர்கள் ஆண்டுக்கு கூடுதலாக 2,465 டாலர் வருமானம் பெறக்கூடியவகையில் முன்மொழிவு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
காளான்கள் தொடர்பில் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
24/03/2026 Duración: 02minகாட்டு காளான் பருவம் தொடங்கியுள்ள நிலையில், death cap உள்ளிட்ட நச்சுக் காளான்கள் தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 24 மார்ச் 2026 - செவ்வாய்க்கிழமை
24/03/2026 Duración: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 24/03/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
குழம்பு வைக்கும் ஆப்பிள் மீண்டு வந்தது!
23/03/2026 Duración: 02minஆஸ்திரேலியாவில் முற்றிலும் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய ஆப்பிள் வகை இன்னும் உயிருடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.