Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
நாடு முழுவதும் சுமார் 6000 ATM இயந்திரங்கள் மூடப்பட்டுள்ளன
16/10/2024 Duración: 04minசெய்திகள்: 17 அக்டோபர் 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்
-
நிச்சயமற்ற விசா நிலைக்கு நிரத்தர தீர்வு - தொடரும் அகதிகளின் போராட்டம்!
16/10/2024 Duración: 06minபுகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு நிச்சயமற்ற விசா நிலையில் உள்ள சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நிரத்தர தீர்வு வேண்டி சுமார் 70 நாட்களுக்கு மேலாக உள்துறை அமைச்சர் அலுவலகத்திற்கு முன்னர் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து SBS News-இற்காக Sara Tomevska ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
-
அடுத்தவாரம் முதல் வைத்தியர்கள் ஆஸ்திரேலியா வருவதற்கான விரைவு விசா
16/10/2024 Duración: 09minதேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு வைத்தியர்கள் ஆஸ்திரேலியாவில் வந்து பணியாற்றுவதற்கு விரைவாக விசா வழங்க அரசினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் இது நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. ஆனால் இது ஒரு ஆபத்தான முன்னெடுப்பு என Royal Australian College of General Practitioners அமைப்பு எச்சரித்துள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் சிட்னியில் வசித்துவரும் சமூகசேவையாளர் கார்த்திகேயன் ராமநாதன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
வருங்கால மனைவிக்காக 4.3 மில்லியன் டொலர்களுக்கு ஆடம்பர வீட்டை வாங்கியுள்ள பிரதமர்
16/10/2024 Duración: 02minஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese தனது வருங்கால மனைவியுடன் வாழ்வதற்காக நியூ சவுத் வேல்ஸின் Central Coastஇல் 4.3 மில்லியன் டொலர்களுக்கு புதிய ஆடம்பர வீடொன்றை கொள்வனவு செய்துள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
குடிவரவு தடுப்புக்காவல் தொடர்பில் மற்றுமொரு சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளும் அரசு
16/10/2024 Duración: 09minகுடிவரவு தடுப்புக்காவல் தொடர்பில் ஆஸ்திரேலிய அரசு மற்றுமொரு புதிய சட்ட நடவடிக்கையை எதிர்கொள்கிறது. இந்த செய்தியின் பின்னணியை அகதிகள் நல செயற்பாட்டாளர் சாரதா ராமநாதன் அவர்களின் கருத்துக்களுடன் எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
இந்திய பேசு பொருள்: பேராசிரியர் G N சாய்பாபா மறைவு
16/10/2024 Duración: 10minடெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா உயிரிழப்பு மற்றும் தமிழகத்தில் நடந்து வந்த சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் ஆகியவை குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
ஆஸ்திரேலியாவில் பெண்கள் ஏன் platelets தானம் செய்ய முடியாது?
16/10/2024 Duración: 10minஆஸ்திரேலியாவில் எப்போதும் இல்லாத அளவு இப்போது இரத்த வங்கிகளில் Platelets கையிருப்பில் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது. அதற்கான காரணம் என்ன மேலும் இரத்த தானம் செய்வது பற்றிய பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் Royal North Shore மருத்துவமனையில் Haematologist-ஆக பணியாற்றும் டாக்டர் பூமகள் குமார் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
T20 உலகக்கோப்பை: இந்தியாவை வென்று அரையிறுதியில் ஆஸ்திரேலியா
15/10/2024 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 16/10/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
ஓட்டுநரின் வருமானத்திற்கு ஏற்ப சாலை விதிமீறல் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என பரிந்துரை!
15/10/2024 Duración: 02minஆஸ்திரேலியாவின் தற்போதைய போக்குவரத்து அபராத முறை, வருமானம் குறைந்தவர்களை மேலும் பாதிக்கிறது எனவும், ஓட்டுநரின் வருமானத்திற்கு ஏற்ப அபராதம் விதிக்கப்பட வேண்டும் எனவும் புதிய அறிக்கை ஒன்று பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Debit & credit card கூடுதல் கட்டணங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் மற்றுமொரு நடவடிக்கை
15/10/2024 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 15/10/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
“இராவணன் பொம்மை எரிப்பது ஏற்புடையதல்ல”
14/10/2024 Duración: 14minபிரிஸ்பன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தீபாவளி கொண்டாட்டத்தின் போது இராவணன் பொம்மை எரிக்கப்படும் என்று அதன் ஒழுங்கமைப்பாளர்கள் அறிவித்திருப்பது தமக்கு ஏற்புடையதல்ல என்று பல தமிழ் அமைப்புகள் குரல் கொடுக்கின்றன.
-
“கனவு மெய்ப்பட்டது” : 2024 அமைதிக்கான நோபல் பரிசை அணுசக்தி எதிர்ப்புக்குழு வென்றது
14/10/2024 Duración: 08minஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீதான அமெரிக்க அணுக் குண்டு தாக்குதலிலிருந்து உயிர் தப்பியவர்களின் அடிமட்ட இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பிற்கு இந்த ஆண்டிற்கான, Nobel Peace Prize - அமைதிக்கான நோபல் பரிசு, வழங்கப்பட்டுள்ளது.
-
இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி
14/10/2024 Duración: 09min2 மணிநேரம் உலகையே திரும்பி பார்க்க வைத்த திருச்சி விமானம், ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் நடைபெற்ற கவரப்பேட்டை ரயில் விபத்து ஏற்படுத்தும் சர்ச்சைகள் மற்றும் நடிகர் விஜய்யின் கட்சியை விமர்சிக்கும் பாஜக போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
Voice தொடர்பான கருத்து வாக்கெடுப்பை ஆஸ்திரேலியா நிராகரித்து இன்றுடன் ஓராண்டு நிறைவு!
14/10/2024 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 14/10/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
First homebuyer’s guide: Getting a home loan in Australia - ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் பெறுவது எப்படி?
13/10/2024 Duración: 09minFor first-time borrowers, the home loan application process can feel overwhelming. Learn the basics around interest rates, the application process and government support you may be eligible for in Australia. - ஒரு வீட்டை வாங்குவதென்பது பொதுவாக ஒருவர் தனது வாழ்க்கையில் மேற்கொள்ளும் மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாகும். இதற்கான நிதியைத் திரட்டுவது மிகவும் சிரமமாக இருக்கலாம். ஆனால் உங்களுக்கு இருக்கும் தெரிவுகளைப் புரிந்துகொள்வது மற்றும் வீட்டுக் கடன் சந்தை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது நிதித்திட்டமிடலை எளிதாக்கும் மற்றும் மன அமைதியை அளிக்கும். இதனை எவ்வாறு செய்யலாம் என்பதுதொடர்பில் Zoe Thomaidou தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
A Tamil who won the local government election for the fourth time - நான்காவது முறையாக உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர்
12/10/2024 Duración: 06min17 Tamil candidates contested the recent local government elections in NSW state. Susai Benjamin has won has his fourth term as Labor candidate in Blacktown council Ward 3. - அண்மையில் NSW மாநிலத்தில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் 17 தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அதில், Blacktown தொகுதி Ward 3 பகுதியில் Labor கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட சூசை பெஞ்சமின் நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்கள்.
-
Perseverance finally pays off for Immanuel Selvaraj - இமானுவல் செல்வராஜின் விடாமுயற்சி இறுதியாக பலன் அளித்தது!
12/10/2024 Duración: 05min17 Tamil candidates contested the recent local government elections in NSW state. Immanuel Selvaraj's victory as the Labor candidate in The Hills Shire West Ward is a reward is seen as a result of his perseverance. - அண்மையில் NSW மாநிலத்தில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் 17 தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அதில், The Hills Shire தொகுதி West Ward பகுதியில் Labor கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட இமானுவல் செல்வராஜின் வெற்றி அவரது விடாமுயற்சிக்குக் கிடைத்த பரிசு என்று அவரைத் தெரிந்தவர்கள் அனைவரும் கூறுகிறார்கள்.
-
A Tamil who gave the Greens their first victory to Cumberland Council - Cumberland உள்ளூராட்சி தேர்தலில் Greens கட்சிக்கு முதல் வெற்றியை ஈட்டிக் கொடுத்தவர் ஒரு தமிழர்
12/10/2024 Duración: 05min17 Tamil candidates contested the recent local government elections in NSW state. Sujan Selvendran, who contested as a Greens party candidate in Cumberland council Wentworthville ward has given victory to the Greens Party for the first time in this constituency. - அண்மையில் NSW மாநிலத்தில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் 17 தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அதில், Cumberland தொகுதி Wentworthville பகுதியில் Greens கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட சுஜன் செல்வேந்திரன், முதல் தடவையாக Greens கட்சிக்கு இந்தத் தொகுதியில் வெற்றியை ஈட்டிக் கொடுத்துள்ளார்.
-
இந்த வார முக்கிய செய்திகள்
12/10/2024 Duración: 07minஇந்த வார முக்கிய செய்திகள்: 12 அக்டோபர் 2024 சனிக்கிழமை.
-
"வாரத்தில் 4 நாள் வேலை" திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் ஆஸ்திரேலிய நிறுவனம்!
11/10/2024 Duración: 02minஆஸ்திரேலியாவின் Medibank நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், four-day working week- நான்கு நாள் வேலை வாரத்தை வெற்றிகரமாக பரீட்சித்துப் பார்த்ததையடுத்து இத்திட்டத்தை அந்நிறுவனம் மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.