Sbs Tamil - Sbs

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • கிழக்கில் தொடரும் போராட்டங்கள்! கண்டுகொள்ளாத அரசு

    10/04/2024 Duración: 07min

    இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் நெருங்குகின்றது. மீள்குடியேற்றம், காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், காணி விடுவிப்பு, சிங்கள மயமாக்கல் என பல்வேறு பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகள் காணப்படவில்லை. இதேவேளையில், கிழக்கு மாகாணத்தில் மேய்ச்சல் நிலம் அபகரிப்புக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. அதுபோல் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேச செயலகத்திற்கு நிர்வாக அதிகாரம் கோரி மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இந்த போராட்டங்களுக்கு தீர்வுகள் இல்லாத நிலையில் போராட்டங்கள் தொடர்கின்றன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • ஈகைத் திருநாள் சிறப்புச் செய்தி

    09/04/2024 Duración: 07min

    ஈகைத் திருநாள் (ரமலான்) குறித்த சிறப்பு செய்திய வழங்குகிறார்: தமிழ்நாட்டில் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகின்றவரும், சென்னை இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொதுச் செயலாளருமான M.A அப்துல்ஹமீது அவர்கள். இது மறு ஒலிபரப்பு. 2014 ஆம் ஆண்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

  • பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்து ஆஸ்திரேலியா பரிசீலிக்கவேண்டும் - வெளியுறவு அமைச்சர்

    09/04/2024 Duración: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 10/04/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • M. G. R.'s right-hand falls - எம். ஜி. ஆரின் வலது கரம் சாய்ந்தது

    09/04/2024 Duración: 10min

    Renowned Tamil politician R. M. Veerappan (aged 94), has passed away. - தமிழக அரசியல்வாதி, திரைப்படத் தயாரிப்பாளர், தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சராகப் பணியாற்றிய இராம. வீரப்பன் அவர்கள் நேற்று காலமானார்.

  • இந்தியா- ஆஸ்திரேலியா விமானசேவைகள் மேலும் விரிவாக்கப்படுவதாக IndiGo தெரிவிப்பு

    09/04/2024 Duración: 02min

    இந்தியாவின் முக்கிய விமான நிறுவனங்களில் ஒன்றான IndiGo மற்றும் ஆஸ்திரேலியாவின் தேசிய விமான நிறுவனமான Qantas ஆகியவை இடையிலான codeshare ஒப்பந்தம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதையடுத்து, இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் ஆஸ்திரேலியாவின் மேலும் பல நகரங்களுக்குச் செல்வதற்கான வசதி கிடைக்கிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலியாவின் பிரபல சுற்றுலாத் தலமொன்றில் இனி பணநோட்டுக்களைப் பயன்படுத்த முடியாது

    09/04/2024 Duración: 02min

    ஆஸ்திரேலியாவின் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான Hamilton தீவு cashless எனப்படுகின்ற முறைக்கு மாறியுள்ளதால் அங்கு இனி பணநோட்டுக்களைப் பயன்படுத்த முடியாது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • AUKUS இரண்டாம் கட்டத்தில் ஜப்பான் இணைந்து கொள்ளுமா?

    09/04/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பு வழங்கும் இன்றைய (செவ்வாய்க்கிழமை 09/04/2024) செய்திகள்.

  • What are the pros and cons of Intermittent Fasting? - Intermittent Fasting உடல் நலத்திற்கு தீங்கானதா?

    08/04/2024 Duración: 12min

    Intermittent fasting has emerged as a popular dietary approach with purported health benefits, but many individuals are still unfamiliar with its fundamentals and how it may fit into their lives. Dr Naleemudeen Sihabdeen explains the multifaceted effects of Intermittent fasting on the human body, shedding light on both its benefits and potential implications. Produced by Renuka Thuraisingham. - உடல் எடையைக் குறைப்பதற்கு பலரும் பல்வேறு விதமான முறைகளைக் கையாள்வது வழக்கம். அந்த முறைகள் தொடர்பிலும் குறிப்பாக Intermittent Fasting முறை தொடர்பிலும் விளக்குகிறார் உடல் எடை பராமரிப்பு தொடர்பில் நிபுணத்துவம்கொண்ட மருத்துவர் நளிமுடீன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Please wait for (a long time for) Services - சேவைகளுக்காக (நீண்ட நேரம்) காத்திருக்கவும்

    08/04/2024 Duración: 08min

    A recent report indicates that 7 million phone calls made to service providers Centrelink and Medicare were not answered. The minister for Government Services, Bill Shorten, says that it will take a while for the situation to improve. - Centrelink மற்றும் Medicare ஆகிய இரண்டு சேவை வழங்குனர்களுக்கும் மக்கள் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகளில் 7 மில்லியன் அழைப்புகளுக்குத் தொலைபேசி தொடர்பு கிடைக்கவில்லை என்று ஒரு அண்மைய அறிக்கை குறிப்பிடுகிறது. நிலைமையை மேம்படுவதற்கு சிறிது காலம் ஆகும் என்று Minister for Government Services – அரச சேவைகளுக்கான அமைச்சர், Bill Shorten தெரிவித்துள்ளார்.

  • Exploring the Legal and Ethical Dimensions of Forced Repatriation - நாடு திரும்ப மறுத்தால் சிறையில் அடைப்பது குறித்த விவாதம்!

    08/04/2024 Duración: 12min

    In our SBS studio, RaySel hosts a discussion with asylum seekers Tamil Selvan and Abishek, alongside Renuka Inbakumar, spokes person of the Tamil Refugee Council. Against the backdrop of proposed legislation in Australia, they explore the complex challenges and human rights implications facing those seeking refuge. - ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவர்களின் புகலிடகோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அவர்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பவேண்டும். ஆனால் அப்படி அவர்கள் சொந்த நாடு திரும்ப மறுத்தால் அவர்களை சிறைக்கு அனுப்ப அரசுக்கு அதிகாரம் தரும் சட்ட முன்வடிவை ஆளும் லேபர் அரசு நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. இந்த பின்னணியில், புகலிடம் கோரிக்கையாளர்களான தமிழ் செல்வன் மற்றும் அபிஷேக் ஆகியோரையும், தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் ரேணுகா இன்பக்குமார் அவர்களையும் நமது SBS ஒலிப்பதிவு கூடத்தில் சந்திக்கிறோம். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.

  • இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

    08/04/2024 Duración: 08min

    'இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்த சர்ச்சை, நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்திய முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனைகளில் பல கோடி ருபாய் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் மற்றும் பரபரக்கும் தமிழக தேர்தல் பிரச்சாரங்கள் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • மேற்கு ஆஸ்திரேலியாவை வந்தடைந்த புகலிடக்கோரிக்கையாளர் படகு- எதிர்க்கட்சி விமர்சனம்!

    08/04/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 08/04/2024) செய்தி. வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

  • இந்த வார முக்கிய செய்திகள்

    05/04/2024 Duración: 04min

    இந்த வார முக்கிய செய்திகள்: 6 ஏப்ரல் 2024 சனிக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • ஆஸ்திரேலியாவில் புதிய உச்சம் தொட்ட சர்வதேச மாணவர் எண்ணிக்கை!

    05/04/2024 Duración: 02min

    ஆஸ்திரேலியாவில் உள்ள சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக 7 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இலங்கையில் இந்த வாரம் இடம்பெற்ற முக்கிய செய்திகள்

    05/04/2024 Duración: 08min

    ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து, விடுவிக்கப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவரும் இலங்கை வந்தனர்; மீண்டும் சூடு பிடிக்கும் கச்சதீவு விவகாரம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • Daylight saving நேரமாற்றம் நடைமுறைக்கு வருகிறது!

    05/04/2024 Duración: 02min

    ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் Daylight saving நேரமாற்றம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • பொதுமக்கள் கொல்லப்படுவதால் அமெரிக்கா கரிசனை, போர்த்தந்திரத்தை இஸ்ரேல் மாற்றுகிறது

    05/04/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 05/04/2024) செய்தி.

  • NSW மாநிலத்திற்கான 491 விசா நிபந்தனைகளில் முக்கிய மாற்றம்!

    05/04/2024 Duración: 02min

    நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கான Skilled Work Regional விசா (Subclass 491) தொடர்பில் அம்மாநில அரசு முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Discover the advantages of a government-issued Digital ID! - அரசு வழங்கும் Digital ID உங்களுக்கு நன்மை பயக்குமா? கண்டறியவும்!

    04/04/2024 Duración: 11min

    The federal government aims to provide a secure means of online identity verification without compromising personal information to corporations. Taking a significant stride forward, the Senate recently approved the Digital ID bill, signalling progress in its implementation. - தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கும் அதே வேளை, ஒருவரின் அடையாளத்தை உறுதி செய்ய பாதுகாப்பான வழி முறையை வழங்குவதற்காக, Digital ID முறையை அரசு அறிமுகப்படுத்துகிறது. இதற்கான சட்ட முன் வரைவிற்கு செனட் சபை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது.

  • Understanding Australia’s precious water resources and unique climate - ஆஸ்திரேலியாவின் தனித்துவமான காலநிலையைப் புரிந்துகொள்ளுதல்!

    04/04/2024 Duración: 09min

    Australia is the driest of all inhabited continents with considerable variation in rainfall, temperature and weather patterns across its different climate zones. Here's why this vast land boasts one of the planet's most unique climates. - காலநிலை மாற்றம், காட்டுத்தீ மற்றும் வறட்சி உள்ளிட்டவை ஆஸ்திரேலியாவின் பல்வேறு சுற்றுச்சூழல் கட்டமைப்புகளை அச்சுறுத்துகின்ற பின்னணியில், அவற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் அவசியமாகும். இதுதொடர்பில் Phil Tucak ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்

página 8 de 25