Tamil Quran Audio
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 46:18:32
- Mas informaciones
Informações:
Sinopsis
Mishary Alfasy's Arabic Quran recitation with Tamil Translation - Verse by Verse Translation of the Quran.
Episodios
-
அத்தியாயம் : 34 - ஸபா - ஓர் ஊர்
10/03/2018 Duración: 30minஸபா எனும் ஊரைப் பற்றியும், அவ்வூரில் செழிப்பான வசதிகள் செய்து கொடுத்தது பற்றியும், அவ்வூரார் நன்றி மறந்தபோது செழிப்பை நீக்கியது பற்றியும் 15, 16, 17 ஆகிய வசனங்களில் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.
-
அத்தியாயம் : 33 - அல் அஹ்ஸாப் - கூட்டுப் படையினர்
10/03/2018 Duración: 45minபல்வேறு எதிரிகள் கூட்டாகப் படைதிரட்டி தாக்க வந்த நிகழ்ச்சி பற்றியும், அப்போது இறைவன் புறத்திலிருந்து கிடைத்த பேருதவி பற்றியும் 9வது வசனம் முதல் 27வது வசனம் வரை கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.
-
அத்தியாயம் : 32 - அஸ்ஸஜ்தா - சிரம் பணிதல்
10/03/2018 Duración: 13minஇறைவனுக்காக ஸஜ்தாச் செய்வோர் பற்றியும் அவர்களுக்குக் கிடைக்கும் பரிசுகள் பற்றியும் 15 முதல் 17 வரை உள்ள வசனங்களில் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.
-
அத்தியாயம் : 31 - லுக்மான் - ஒரு நல்ல மனிதரின் பெயர்
10/03/2018 Duración: 18minலுக்மான் என்ற நல்லடியார் தமது மகனுக்குக் கூறும் அறிவுரை 13வது வசனம் முதல் 19வது வசனம் வரை கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.
-
அத்தியாயம் : 30 - அர்ரூம் – ரோமப் பேரரசு
10/03/2018 Duración: 29minரோமாபுரி சாம்ராஜ்யம் தோற்றது பற்றியும், பின்னர் அது மீண்டும் வெற்றி பெறும் என்பது பற்றியும் 2, 3, 4 வசனங்களில் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு ரோமப்பேரரசு என்று பெயரிடப்பட்டுள்ளது.
-
அத்தியாயம் : 29 - அல் அன்கபூத் - சிலந்தி
10/03/2018 Duración: 33minஇந்த அத்தியாயத்தின் 41வது வசனத்தில் தவறான கடவுள் கொள்கை உடையவர்களுக்கு உதாரணமாக சிலந்தி வலை கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
-
அத்தியாயம் : 28 - அல் கஸஸ் - நடந்த செய்திகள்
10/03/2018 Duración: 49minஇந்த அத்தியாயத்தின் 25வது வசனத்தில் 'அல் கஸஸ்' என்ற சொல் இடம் பெற்றுள்ளதால் இந்தப் பெயர்.
-
அத்தியாயம் : 27 - அந்நம்ல் - எறும்பு
10/03/2018 Duración: 42minஇந்த அத்தியாயத்தின் 18, 19 வசனங்களில் எறும்பு பற்றிய ஒரு செய்தி இடம் பெற்றுள்ளதால் இப்பெயரிடப்பட்டது.
-
அத்தியாயம் : 26 - அஷ் ஷுஅரா - கவிஞர்கள்
10/03/2018 Duración: 48minஇந்த அத்தியாயத்தின் 221வது முதல் 227வது வசனம் வரை கவிஞர்கள் பின்பற்றத்தக்கவர்கள் அல்லர் எனவும், நல்ல கவிஞர்களும், கெட்ட கவிஞர்களும் உள்ளனர் என்றும் கூறப்படுவதால் கவிஞர்கள் என இந்த அத்தியாயத்துக்குப் பெயரிடப்பட்டது.
-
அத்தியாயம் : 25 - அல் ஃபுர்கான் - வேறுபடுத்திக் காட்டுவது
10/03/2018 Duración: 30minதிருக்குர்ஆனைப் பற்றி ஃபுர்கான் என்று இந்த அத்தியாயத்தின் முதல் வசனம் கூறுவதால் இவ்வாறு பெயரிடப்பட்டது.
-
அத்தியாயம் : 24 - அந்நூர் - அந்த ஒளி
10/03/2018 Duración: 47minஇந்த அத்தியாயத்தின் 35வது வசனத்தில் இறைவன் தனது நேர்வழிக்கு ஒளியை உதாரணமாகக் கூறுவதால் அந்நூர் (அந்த ஒளி) என்று பெயர் சூட்டப்பட்டது.
-
அத்தியாயம் : 23 - அல் முஃமினூன் - நம்பிக்கை கொண்டோர்
10/03/2018 Duración: 38minஇந்த அத்தியாயத்தின் 1 முதல் 11 வரை உள்ள வசனங்களில் வெற்றி பெறும் நம்பிக்கையாளர்கள் பற்றி கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
-
அத்தியாயம் : 22 - அல் ஹஜ் - கடமையான ஒரு வணக்கம்
10/03/2018 Duración: 45minஇந்த அத்தியாயத்தின் 27 முதல் 37 வரை உள்ள வசனங்களில் ஹஜ் பற்றியும், அதன் ஒழுங்குகள் பற்றியும் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்.
-
அத்தியாயம் : 21 - அல் அன்பியா - நபிமார்கள்
10/03/2018 Duración: 42minமூஸா, ஹாரூன், இப்ராஹீம், லூத், இஸ்ஹாக், யாகூப், நூஹ், தாவூத், ஸுலைமான், அய்யூப், இஸ்மாயீல், இத்ரீஸ், துல்கிஃப்ல், யூனுஸ், ஸகரிய்யா ஆகிய நபிமார்கள் குறித்து பேசப்படுவதால் இந்த அத்தியாயம் நபிமார்கள் என்று பெயர் சூட்டப்பட்டது.
-
அத்தியாயம் : 20 - தா ஹா - அரபு மொழியின் 16 மற்றும் 26வது எழுத்துக்கள்.
10/03/2018 Duración: 45minதா, ஹா எனும் இரண்டு எழுத்துக்கள் இந்த அத்தியாயத்தின் முதல் வசனமாக இடம் பெறுவதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிட்டுள்ளனர்.
-
அத்தியாயம் : 19 - மர்யம் - ஈஸா நபியின் தாயாரின் பெயர்
10/03/2018 Duración: 34minஇந்த அத்தியாயத்தின் 16 முதல் 34 வரை உள்ள வசனங்களில் மர்யம் (அலை) அவர்கள் கணவரில்லாமல் கருவுற்று ஈஸா நபியை ஈன்றெடுத்த செய்தி கூறப்படுவதால் மர்யம் என்று இந்த அத்தியாயம் பெயர்பெற்றது.
-
அத்தியாயம் : 18 - அல் கஹ்ஃப் - அந்தக்குகை
10/03/2018 Duración: 53minஇந்த அத்தியாயத்தின் 9 முதல் 26 வரை உள்ள வசனங்களில் கொள்கைக்காக நாடு துறந்து குகையில் தஞ்சமடைந்த சில இளைஞர்களின் அற்புத வரலாறு கூறப்படுவதால் இந்தப் பெயர் வந்தது.
-
அத்தியாயம் : 17 - பனூ இஸ்ராயீல் - இஸ்ராயீலின் மக்கள்
10/03/2018 Duración: 53minஇஸ்ரவேலர்களுக்கு இறைவன் அளித்த வெற்றிகளும், அவர்கள் இறைவனுக்கு மாறுசெய்ததும், அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விகளும் இந்த அத்தியாயத்தில் 4 முதல் 8 வரை உள்ள வசனங்களில் கூறப்படுவதால் இஸ்ராயீலின் மக்கள் என்று இந்த அத்தியாயம் பெயர் பெற்றது.
-
அத்தியாயம் : 16 - அன்னஹ்ல் - தேனீ
10/03/2018 Duración: 01h05minஇந்த அத்தியாயத்தின் 68, 69 வசனங்களில் தேனீயைப் பற்றியும், தேனைப் பற்றியும் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு தேனீ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
-
அத்தியாயம் : 15 - அல் ஹிஜ்ர் - ஓர் ஊர்
10/03/2018 Duración: 24minஹிஜ்ர் என்பது ஸமூது சமுதாயத்தினர் வாழ்ந்த ஊரின் பெயர். இந்தச் சமுதாயத்தினரைப் பற்றி இந்த அத்தியாயத்தின் 80 முதல் 84 வரை உள்ள வசனங்களில் குறிப்பிடப்படுவதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.