Informações:
Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
Regional Work Visa திட்டம் விரிவுபடுத்தப்படுவதாக தெற்கு ஆஸ்திரேலியா அறிவிப்பு!
17/04/2024 Duración: 02minதெற்கு ஆஸ்திரேலியா மாநிலம் DAMA எனப்படுகிற Regional Designated Area Migration ஒப்பந்தத்தின் கீழ் கூடுதலாக 1,250 விசா இடங்களை வழங்குகிறது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
கொலைசெய்யப்பட்ட Ballarat பெண் சமந்தாவின் உடலை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை
17/04/2024 Duración: 08minவிக்டோரியாவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு காணாமல்போன Samantha Murphy என்ற பெண் கொலைசெய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் 22 வயது இளைஞன் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சமந்தாவின் உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இச்செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
A harvest festival celebrated in Australia's Little India - ஆஸ்திரேலியாவின் ‘சிறு இந்தியா’ கொண்டாடிய அறுவடைத் திருவிழா
17/04/2024 Duración: 09minLast weekend, the Harvest Festival or Vaisakhi (Punjabi: विषाखी) came alive in the vibrant streets of Little India, nestled in Harris Park, a suburb of Sydney. - சிட்னி புறநகர் Harris Park என்ற இடத்திலுள்ள Little Indiaவில் கடந்த வார இறுதியில் அறுவடை விழா - Harvest Festival அல்லது வைசாக்கி (Vaisakhi, பஞ்சாபி: ਵਿਸਾਖੀ) கொண்டாடப்பட்டது.
-
இந்திய தேர்தல் களம்: தமிழகத்தில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது!
17/04/2024 Duración: 09minதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவுபெறுகிறது. இந்திய தேர்தல் களம் குறித்த தொகுப்பின் ஆறாம் பாகத்தை முன்வைக்கிறார் தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள்.
-
பிரிட்டனில் 2009ன் பின்னர் பிறந்தவர்கள் சிகரெட் வாங்குவதற்குத் தடை வருகிறது?
16/04/2024 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 17/04/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
NSW Kiama அருகே செல்ஃபி எடுத்த சுற்றுலாப்பயணி அலையில் அடித்துச் செல்லப்பட்டு மரணம்!
16/04/2024 Duración: 01minNSW மாநிலம் Kiama அருகே Bombo Headland Quarryயில் நண்பர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
சிட்னி Bondi Junction தாக்குதலாளியை எதிர்த்துப் போராடிய நபருக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை?
16/04/2024 Duración: 02minசிட்னி Bondi Junction கத்திக்குத்து தாக்குதலை நடத்திய நபரை எதிர்த்துப்போராடிய பிரெஞ்சு குடிமகன் ஒருவரின் துணிச்சலைப் பாராட்டிய பிரதமர், அவர் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியுமென அழைப்புவிடுத்தார்.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
சிட்னி தேவாலய கத்திக்குத்து தாக்குதல் - தீவிரவாத செயல் என்கிறது NSW காவல்துறை
16/04/2024 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 16/04/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.
-
"Peggy and Molly: A Love Story Unlike Any Other" - Peggyயும் Mollyயும் – இது வரை கேட்டிராத ஒரு காதல் கதை
15/04/2024 Duración: 12minIn a world inundated with tales of war, politics, murder, and natural calamity, it's a breath of fresh air to encounter narratives untouched by such chaos. These are the stories that rekindle our faith in humanity. Kulasegaram Sanchayan has uncovered one such story, nestled in the tranquil confines of Gold Coast, Queensland. - யுத்தம், அரசியல் மோதல்கள், கொலை, இயற்கைப் பேரழிவு – இப்படியான செய்திகளுக்கு மத்தியில் வாழும் எமக்கு, மனித குலத்தின் மீதும் இந்தப் பூவுலகில் எம் வாழ்வு மீதும் மீண்டும் நம்பிக்கையை ஊட்டும் சில செய்திகள் மனதுக்கு இதமளிக்கின்றன. அப்படியானதொரு செய்தியை Queensland மாநிலத்தின் Gold Coastஇல் வசிக்கும் ஒரு தம்பதியினர் இடமிருந்து எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
A new flu vaccine is available this year, ahead of a winter experts think will be rough - புதிய flucelvax தடுப்பூசி ஏனைய flu தடுப்பூசிகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
15/04/2024 Duración: 12minAs this year's flu season begins, a new cell-based influenza vaccine has been launched for Australia's publicly funded health system after being available on the private market since 2021. Dr Rajesh Kannan talks about the new cell-based flu vaccine and emphasize the importance of flu vaccination as a crucial precaution, particularly for vulnerable groups. Produced by Renuka Thuraisingham. - Flu பரவும் காலம் தற்போது ஆரம்பமாகிவிட்டநிலையில், flu தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் தொடர்பிலும், நாட்டில் தற்போது வழங்கப்படுகின்ற flucelvax தடுப்பூசி தொடர்பிலும் சில முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் சிட்னியில் குடும்ப மருத்துவராகப் பணியாற்றும் Dr N ராஜேஷ் கண்ணன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இந்திய தேர்தல் களம்: நீட் தேர்வு ஏன் பேசுபொருள் ஆகிறது?
15/04/2024 Duración: 11minஇந்திய நாடாளுமன்ற தேர்தல் களத்தில் பேசப்படும் நீட் தேர்வு குறித்த சிறப்புப் பார்வை. நீட் குறித்த வரலாற்று பின்னணியோடு இந்திய தேர்தல் களம் குறித்த நிகழ்ச்சியின் ஐந்தாம் பாகம். முன்வைக்கிறார் தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள்.
-
A man shot dead by police after killing six people at a Sydney shopping centre - சிட்னி நகரில் 6 பேரைக் கொன்றவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்: நடந்தது என்ன?
15/04/2024 Duración: 08minSix people have been killed and a man has been shot dead by police after he attacked several people at a busy shopping centre in Sydney's eastern suburbs. - சிட்னி நகரின் Bondi Junction இல் அமைந்துள்ள Westfield Shopping Centreற்கு சென்ற ஒருவர் ஆறு பேரைக் கத்தியால் குத்தி கொன்றுள்ளார். தாக்குதல் நடத்தியவரைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்று விட்டார்கள். கொல்லப்பட்டவர்களை விட மேலும் சிலர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். விசாரணை அனைத்தும் முடியும் வரை Westfield Shopping Centre பொது மக்கள் பாவனைக்கு மூடப்பட்டுள்ளது.
-
இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி
15/04/2024 Duración: 08min2024 மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை, தேர்தல் பரப்புரையின் போது ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு மற்றும் வருகின்ற ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு - உச்ச கட்ட பிரச்சாரத்தில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
சிட்னி Bondi Junction கத்திக்குத்து தாக்குதல்: விசாரணைகள் தொடர்வதாக NSW காவல்துறை தெரிவிப்பு
15/04/2024 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 15/04/2024) செய்தி. வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
சிட்னி Bondi Junction கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்வு
13/04/2024 Duración: 01minசிட்னியின் Bondi Junction Westfield shopping centre இல் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இந்த வார முக்கிய செய்திகள்
13/04/2024 Duración: 05minஇந்த வார முக்கிய செய்திகள்: 13 ஏப்ரல் 2024 சனிக்கிழமை.
-
Australia Post கடித விநியோக சேவையில் கொண்டுவரப்படும் முக்கிய மாற்றம்!
12/04/2024 Duración: 02minAustralia Post தனது கடித விநியோக செயற்பாட்டை மறுசீரமைத்து வந்தபின்னணியில், ஏப்ரல் 15 முதல் முக்கிய மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Navigating the implicit right to protest in Australia - ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடத்துவது தொடர்பான நமது உரிமைகள்
12/04/2024 Duración: 09minEvery week, impassioned Australians take to the streets, raising their voices in protest on important issues. Protesting is not an offence, but protesters sometimes test the limits of the law with extreme and antisocial behaviour. The chance of running into trouble depends on where you’re protesting and how you behave. - ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடத்துவது தொடர்பான நமது உரிமைகள் தொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
நூற்றாண்டின் மிகப் பெரும் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட அமெரிக்கர் OJ Simpson காலமானார்
12/04/2024 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 12/04/2024) செய்தி.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
12/04/2024 Duración: 08minஇந்த ஆண்டில் அதிபர் தேர்தல் இடம்பெறும் என பல்வேறு தரப்பினராலும் எதிர்பார்க்கப்படும் நிலையில் அது தொடர்பிலான தகவல்களும் வந்து கொண்டுள்ளன. இந்த நிலையில் அதிபர் தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் பலரும் கருத்து. மற்றும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவிக்கும் இந்த வேளையில் பிரதான உணவாக கருதப்படும் அரிசியின் விலையை குறைக்குமாறு கோரி வடக்கு கிழக்கில் பெண்கள் போராட்டம். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.