Sbs Tamil - Sbs

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • இலங்கையில் இந்த வாரம் இடம்பெற்ற முக்கிய செய்திகள்

    05/04/2024 Duración: 08min

    ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து, விடுவிக்கப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவரும் இலங்கை வந்தனர்; மீண்டும் சூடு பிடிக்கும் கச்சதீவு விவகாரம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • Daylight saving நேரமாற்றம் நடைமுறைக்கு வருகிறது!

    05/04/2024 Duración: 02min

    ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் Daylight saving நேரமாற்றம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • பொதுமக்கள் கொல்லப்படுவதால் அமெரிக்கா கரிசனை, போர்த்தந்திரத்தை இஸ்ரேல் மாற்றுகிறது

    05/04/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 05/04/2024) செய்தி.

  • NSW மாநிலத்திற்கான 491 விசா நிபந்தனைகளில் முக்கிய மாற்றம்!

    05/04/2024 Duración: 02min

    நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கான Skilled Work Regional விசா (Subclass 491) தொடர்பில் அம்மாநில அரசு முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Discover the advantages of a government-issued Digital ID! - அரசு வழங்கும் Digital ID உங்களுக்கு நன்மை பயக்குமா? கண்டறியவும்!

    04/04/2024 Duración: 11min

    The federal government aims to provide a secure means of online identity verification without compromising personal information to corporations. Taking a significant stride forward, the Senate recently approved the Digital ID bill, signalling progress in its implementation. - தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கும் அதே வேளை, ஒருவரின் அடையாளத்தை உறுதி செய்ய பாதுகாப்பான வழி முறையை வழங்குவதற்காக, Digital ID முறையை அரசு அறிமுகப்படுத்துகிறது. இதற்கான சட்ட முன் வரைவிற்கு செனட் சபை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது.

  • Understanding Australia’s precious water resources and unique climate - ஆஸ்திரேலியாவின் தனித்துவமான காலநிலையைப் புரிந்துகொள்ளுதல்!

    04/04/2024 Duración: 09min

    Australia is the driest of all inhabited continents with considerable variation in rainfall, temperature and weather patterns across its different climate zones. Here's why this vast land boasts one of the planet's most unique climates. - காலநிலை மாற்றம், காட்டுத்தீ மற்றும் வறட்சி உள்ளிட்டவை ஆஸ்திரேலியாவின் பல்வேறு சுற்றுச்சூழல் கட்டமைப்புகளை அச்சுறுத்துகின்ற பின்னணியில், அவற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் அவசியமாகும். இதுதொடர்பில் Phil Tucak ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்

  • இந்திய தேர்தலில் வீசும் கச்சத்தீவு புயல்: பின்னணியும், வரலாறும்!

    04/04/2024 Duración: 11min

    இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் பின்னணியில், இந்திய இலங்கை நாடுகளுக்கிடையே நிலவிவரும் கச்சத்தீவு இந்திய தேர்தல் களத்தில் புயலை கிளப்பியுள்ளது. இந்திய தேர்தல் குறித்த சிறப்பு நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம். முன்வைக்கிறார் தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள்.

  • Safeguarding Your Income and Preventing Wage Theft - சம்பளம் குறைகிறதா? ஊதிய திருட்டா? கவனமாக இருப்பது எப்படி?

    04/04/2024 Duración: 13min

    An analysis shows that Australian workers lose about $850 million every year because of wage theft. To address this worrying problem, Shankar Jayapandian in Brisbane who holds Master of Professional Accounting with Master of Business Administration and completed "Ethics and Governance" in CPA, offers helpful advice on what wage theft is and how to stop it from happening. - ஊதிய திருட்டில் ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் ஆண்டுக்கு 850 மில்லியன் டாலர்களை இழக்கின்றனர் என்று புதிய தகவல் தெரிவிகிறது. இந்த பின்னணியில் ஊதிய திருட்டு என்றால் என்ன, சம்பளம் வாங்கும் ஒருவர் எந்த வகையில் கவனமாக இருந்து ஊதிய திருட்டிலிருந்து தப்பிப்பது என்று சில ஆலோசனைகளை முன்வைக்கிறார் பிரிஸ்பன் நகரில் வாழும் சங்கர் ஜெயபாண்டியன் அவர்கள். அவர் Master of Professional Accounting with Master of Business Administration பட்டம் பெற்றவர்; "Ethics and Governance" கல்வியை CPAயில் பயின்றவர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

  • “பகுதி நேர முஸ்லிம்” - கவிதைக்கு கவிக்கோ தரும் விளக்கம்!

    04/04/2024 Duración: 08min

    உடலால் மறைந்தாலும், தமிழ் கவிதை வாழும்வரை வாழ்வார் எனும் தகமை கொண்ட பெரும் கவிஞர்களில் ஒருவர் கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள். அவர் மறையும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு (2013) சிட்னி வந்திருந்தபோது “கவிதையும் கவிஞரும்” பகுதியில் “பகுதி நேர முஸ்லிம்” எனும் தனது கவிதை குறித்து கவிக்கோ வழங்கிய விளக்கம். இது மறுபதிவு. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

  • தமிழுக்கும் திராவிடத்திற்கும் தொண்டாற்றிய வெளிநாட்டு அறிஞர் Zvelebil

    04/04/2024 Duración: 06min

    தமிழுக்கும் திராவிடத்திற்கும் தொண்டாற்றிய வெளிநாட்டு அறிஞர்களில் பேராசிரியர் Kamil Zvelebil அவர்கள் வித்தியாசமானவர். எப்படி? தமிழ்த்தடம் நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் தனபாலசிங்கம் அவர்கள்.

  • Invention that changed the history of mankind – what do you think? - மனித குல வரலாற்றை மாற்றிய புதிய கண்டுபிடிப்பு எது? கொஞ்சம் சிந்தியுங்கள், பின்னர் செவிமடுங்கள்

    04/04/2024 Duración: 08min

    April 15th to the 21st is celebrated as World Creativity and Innovation Week. SBS Tamil radio congratulates all creators and inventors. Our presenter, Kulasegaram Sanchayan asks some of our listeners - Girishkumar Narayanan, Sathya Kantharajah, Inventor Ksheerabhdi Krishna, Poet Aanni, Guna Ratnam, Thiyagaraja Wigneswaran, Vidhyavathy Sellathurai, Sellathurai Parimalanathan, Maithili Ramanathan, Thirumalai Moorthy, and Professor Maheswaran – what the most significant invention in human history is. - ஏப்ரல் 15ம் நாளிலிருந்து 21ம் நாள் வரை, படைப்பாற்றலையும் புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்க, World Creativity and Innovation Week கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில், படைப்பாளிக்கும் புதிதாகக் கண்டுபிடிப்பவர்களுக்கும் SBS வானொலி வாழ்த்துத் தெரிவிக்கும் அதேவேளை, எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன், இது குறித்து நேயர்களின் கருத்துகளுடன் ஒரு நிகழ்ச்சி படைத்துள்ளார்.

  • NSW & Queensland மாநிலங்கள் நாளை பெரும் வெள்ளத்தை சந்திக்கின்றன!

    04/04/2024 Duración: 05min

    செய்திகள்: 4 ஏப்ரல் 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • The problem of eye strain from staring at screens all day - அதிக நேரம் மொபைல், கணினி பார்ப்பதால் கண் சோர்வு ஏற்படுகிறதா? என்ன தீர்வு?

    03/04/2024 Duración: 06min

    Eye strain from extended screen time is a growing problem. But evidence suggests that blue light is not the cause, and blue-blockers are not the solution. The story by Deborah Groarke for SBS News was produced by RaySel for SBS Tamil. - நம்மில் பலருக்கு, வேலைக்காகவோஅல்லது விளையாட்டு, கேளிக்கை போன்றவற்றிற்கு டிஜிட்டல் திரைகளைப் பார்ப்பது அவசியம். ஆனால் இப்படி அதிக நேரம் திரையை பார்ப்பதால் என்ன விளைவுகள் ஏற்படலாம்? அதற்கு என்ன தீர்வு என்று விளக்கும் விவரணம். ஆங்கில மூலம் SBS-News க்காக Deborah Groarke. தமிழில்: றைசெல்.

  • கங்காருக்கள் வாகனங்களுக்கு முன்னால் பாய்வதைத் தடுக்க உதவும் புதிய சாதனம்

    03/04/2024 Duración: 02min

    கங்காருக்கள் வாகனங்களுக்கு முன்னால் பாய்வதைத் தடுக்க உதவும் சாதனமொன்று ஆஸ்திரேலியாவில் விரைவில் சோதிக்கப்படவுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • What we know about the Baltimore bridge collapse - பால்டிமோர் கப்பல் விபத்திற்கான காரணம் என்ன?

    03/04/2024 Duración: 12min

    In the wake of the catastrophic collision between a container ship and the iconic Francis Scott Key Bridge near Baltimore, Maryland, Master Mariner Johnson provides crucial insights into the cause of the bridge collapse and pertinent details about the involved vessel. Produced by Renuka - அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள ஒரு பாலத்தில், சரக்கு கப்பல் மோதிய விபத்து நாமறிந்த செய்தி. இந்த விபத்து தொடர்பிலும் பாலங்கள், குறுகிய கால்வாய்களை கப்பல்கள் கடப்பது எப்படி? அவசர நேரத்தில் கப்பலை நிறுத்துவது சாத்தியமா? என்பது தொடர்பிலும் Master Mariner- தலைமை மாலுமியாக பணியாற்றும் திரு ஜான்சன் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Why Australia's 3G network is shutting down? - 3G வலையமைப்பு மூடப்படுவது ஏன்?

    03/04/2024 Duración: 10min

    It's been a feature of phone coverage for decades, but in the coming months all of Australia's 3G networks will have been switched off, impacting millions of devices across the nation. Mr Sethu Radhakrishnan from Brisbane who worked in Telstra and currently working in cyber security explains more - 3G வலையமைப்பை மூடும் நடவடிக்கை ஆரம்பமாகிவுள்ள நிலையில் ஏன் 3G வலையமைப்பு மூடப்படுகிறது இதனால் பாதிக்கப்படக்கூடியவர்கள் யார் போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் பிரிஸ்பனில் Telstra-வில் 5 ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு தற்போது இணையப் பாதுகாப்பு துறையில் பணிபுரிந்து வரும் சேது ராதாகிருஷ்ணன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • இந்திய தேர்தல் களம்: என்ன நடக்கிறது?

    03/04/2024 Duración: 08min

    இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் பின்னணியில், இந்திய தேர்தல் குறித்த கள நிலவரம் குறித்த சிறப்பு நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம். முன்வைக்கிறார் தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள்.

  • ஆஸ்திரேலியாவின் Governor Generalயாக Samantha Mostyn நியமிக்கப்பட்டார்

    03/04/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 03/04/2024) செய்தி.

  • சிட்னியில் அமில வீச்சுக்குள்ளாகி மரணமடைந்த மோனிகா- தசாப்தம் கடந்து தொடரும் மர்மம்

    02/04/2024 Duración: 12min

    சிட்னியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பின்னணிகொண்ட மோனிகா செட்டி என்ற பெண் மீது மேற்கொள்ளப்பட்ட அமில வீச்சுத் தாக்குதலையடுத்து அவர் மரணமடைந்தார். இது தொடர்பில் கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையில் மோனிகா செட்டி வழக்கு மர்மமான ஒன்றாக தொடர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக வீடுகளின் விலை அதிகரிப்பு!

    02/04/2024 Duración: 02min

    ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக, மார்ச் மாதத்திலும் வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக புதிய தரவு கூறுகின்றது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

página 3 de 26