Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
தீ அபாயம்: ஆயிரக்கணக்கான வாகனங்களை திரும்பப்பெறும் Hyundai
10/04/2026 Duración: 02minHyundai நிறுவனம் ஆஸ்திரேலியாவில் சுமார் 5,000 மின் வாகனங்களுக்கு recall-திரும்பப்பெறுதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Chasing Dreams in Baggy Green: Nitesh Samuel’s Cricket Journey - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழனின் கதை
10/04/2026 Duración: 17minNitesh Samuel is a rising Australian U19 opening batsman from NSW, known for his heavy run-scoring in national championships and selection for the 2026 U19 World Cup. With strong technique and temperament, he’s considered one of the promising young players coming through Australia’s cricket system. Nitesh shares his experience and future goals with Praba Maheswaran. - ஆஸ்திரேலியா Under-19, உலகக்கோப்பை அணிக்காக விளையாடிய தமிழ் கிரிக்கெட் வீரர் நிதேஷ் சாமுவேல் அவர்கள் எமக்கு வழங்கிய நேர்காணல். அவரது கிரிக்கெட் பயணமும், இதுவரை பெற்ற அனுபவங்களும், எதிர்காலக் கனவுகளும் குறித்து அவர் எம்முடன் பகிர்ந்துகொண்டார். அத்துடன் நிதேஷின் தந்தை லால் சாமுவேல் அவர்களும் கிரிக்கெட் விளையாட்டிலான தனது ஈடுபாடு பற்றியும் தனது இரு மகன்களினது சாதனைகள் பற்றியும் பெருமையுடன் சில வார்த்தைகள் கூறினார். அவர்களிருவருடனும் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
செய்தியின் பின்னணி: ஆப்கான் போர்க் குற்றங்கள் - ஆஸ்திரேலியாவின் வேறுபட்ட அணுகுமுறை
10/04/2026 Duración: 06minஆப்கானிஸ்தானில் நடந்ததாக கூறப்படும் போர் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் முறையில், ஆஸ்திரேலியாவின் அணுகுமுறை அதன் முக்கிய கூட்டாளிகளிலிருந்து வேறுபட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். நாட்டின் மிக உயர்ந்த விருதுகள் பெற்ற முன்னாள் வீரர் பென் ராபர்ட்ஸ்-ஸ்மித் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருப்பது, இந்த விசாரணைகளில் ஒரு முக்கிய முன்னேற்றமாகவும், ஆஸ்திரேலியாவின் தனித்துவமான தன்மையை வெளிப்படுத்துவதாகவும் பார்க்கப்படுகிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இன்றைய செய்திகள்: 10 ஏப்ரல் 2026 - வெள்ளிக்கிழமை
10/04/2026 Duración: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 10/04/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
தமிழ்நாட்டில் தந்தை & மகன் கொலை வழக்கில் 9 காவலர்களுக்கு தூக்குத் தண்டனை!
09/04/2026 Duración: 08minதமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை & மகன் காவல் நிலைய படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 9 காவலர்களுக்கும் இரட்டை தூக்குத்தண்டனை என்று மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
ஆஸ்திரேலிய விசா விண்ணப்பத்தில் இழைத்த தவறினால் நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ள பெண்
09/04/2026 Duración: 02minதெற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் பெண் ஒருவர் விசா விண்ணப்பம் தொடர்பில் இழைத்த தவறொன்றினால் தற்போது ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலியா அறிவோம்: நமது விளையாட்டு அணிகளின் செல்லப்பெயர்கள் தெரியுமா?
09/04/2026 Duración: 09minஆஸ்திரேலியா விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடு. விளையாட்டு என்பது மக்களின் பண்பாட்டுக் கூறுகளில் கலந்த ஒன்று. ஆஸ்திரேலியாவின் பல விளையாட்டு அணிகள் நமக்கு தெரியும். ஆனால் இந்த விளையாட்டு அணிகளுக்கு தரப்பட்டிருக்கும் செல்லப்பெயர்கள் தெரியுமா? “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சிவழி விவரிக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
-
மொபைல் பேசியதால் சிறுவன் உயிரிழப்பு! தண்டனை போதுமானதல்ல என்கிறது குடும்பம்
09/04/2026 Duración: 05minBryson Dimovski என்ற 14 வயது சிறுவன் உயிரிழக்க காரணமான ஓட்டுநருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு Bryson Dimovski குடும்பத்தை மிகுந்த ஆத்திரத்திற்குள்ளாக்கியுள்ளது. இந்த விபத்து குறித்தும், நடைபெற்ற விசாரணை, அளிக்கப்பட்ட தீர்ப்பு என்றும் பல அம்சங்கள் குறித்தும் விளக்குகிறார் உயிர்மெய்யார்.
-
நீங்கள் முதுகுவலியால் அவதிப்படுகிறீர்களா?
09/04/2026 Duración: 07minமுதுகுவலி என்பது நம்மை அடிக்கடி பாதிக்கும் ஒரு பிரச்சினையகும். இது குறித்த பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் கனகரட்ணம் காண்டீபன் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். இந்நிகழ்ச்சி ஒரு மறுஒலிபரப்பு.
-
மன்னார் மண்ணில் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் தேடல் சர்ச்சையாகிறது
09/04/2026 Duración: 15minஇலங்கையின் வடமேற்குப் பகுதியிலுள்ள மன்னார் தீவிலிருந்து ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று இல்மனைட் மணலைத் தோண்டியெடுக்கத் திட்டமிடுகிறது. இது குறித்து Bridging Lanka என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைமை இயக்குனர் Jeremy Ahamed Liyanage மற்றும் அதில் பணியாற்றும் றோஜன் ஆகியோரது கருத்துகளுடன் 2020ஆம் ஆண்டில் குலசேகரம் சஞ்சயன் படைத்த விவரணம் இது. இல்மனைட் சுரங்கங்கள் மன்னார் தீவில் அமைக்கப்படுவது குறித்து இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன என்று அறிந்து கொள்ள, சுரங்கங்களுக்கு அனுமதி வழங்கும் Geological Survey & Mines Bureau – புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தையும் Central Environmental Authority என்ற மத்திய சுற்றாடல் அதிகாரசபையையும் பலமுறை தொடர்பு கொண்டோம். அவர்களிடமிருந்து எந்தப்பதிலும் எமக்குக் கிடைக்கவில்லை. 2020ஆம் ஆண்டு ஒலிபரப்பான நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது.
-
செய்தியின் பின்னணி: பெட்ரோல் நிலையங்கள் திட்டமிட்டே விலையை உயர்த்துகின்றனவா? மாநிலங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன?
09/04/2026 Duración: 10minநாட்டில் பெட்ரோல் நிலையங்கள் திட்டமிட்டே விலையை உயர்த்துகின்றனவா? ஆஸ்திரேலிய மாநிலங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன? என்பது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சி. முன்வைக்கிறார் றைசெல்.
-
இன்றைய செய்திகள்: 9 ஏப்ரல் 2026 வியாழக்கிழமை
09/04/2026 Duración: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 9/04/2026) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.
-
வெளிநாட்டு மருந்துகளுக்கு அமெரிக்காவின் 100 சத வரி அறிவிப்பு ஆஸ்திரேலியாவை பாதிக்குமா?
08/04/2026 Duración: 08minஅமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்களுக்கு 100 சதம் வரி விதிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருப்பது ஆஸ்திரேலிய மருந்து நிறுவனங்கள், மற்றும் ஆஸ்திரேலியர்கள் மலிவாக மருந்துகள் வாங்கும் திட்டமான PBS திட்டத்தை பாதிக்கும் என்று சிலர் அஞ்சுகின்றனர். இது குறித்து விவரிக்கிறார் உயிர்மெய்யார்.
-
சூதாட்ட விளம்பரங்களுக்கான அரசின் கடுமையான கட்டுப்பாடுகள் எப்படி இருக்கும்?
08/04/2026 Duración: 08minஆஸ்திரேலியாவில் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் சூதாட்ட விளம்பரங்கள் மீதான கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும். ஆஸ்திரேலிய வரலாற்றில் சூதாட்டம் தொடர்பான மிக முக்கியமான சீர்திருத்தம் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் சிலர் இது போதாது என்று விமர்சிக்கிறார்கள். என்னென்ன புதிய கட்டுப்பாடுகள்? ஏன் இந்தத் தடைகள்? ஊடகங்கள் தரும் செய்திகளை விளக்குகிறார் உயிர்மெய்யார்.
-
சிட்னி தமிழர் சித்திரைப் புத்தாண்டு விழா!
08/04/2026 Duración: 11minசிட்னி தமிழர் அமைப்புகள் மற்றும் வர்த்தகர்கள் ஆதரவோடு தாயகம் குழுமம் வழங்கும் சிட்னி தமிழர் சித்திரைப் புத்தாண்டு விழா ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி சனிக்கிழமை NSW மாநிலத்தின் Merrylands, Pitt Street யில் அமைந்துள்ள Holroyd Gardens எனுமிடத்தில் நடைபெறுகிறது. இது குறித்து நம்முடன் கலந்துரையாடுகின்றனர்: ஜேம்ஸ் வடிவேலு சுகுமார் மாறும் ஞானமகள் அசோகன் ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
-
தமிழக தேர்தல் களம் – 8 ஏப்ரல் 2026
08/04/2026 Duración: 08minதமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த பின்னணியில் தமிழக தேர்தல் கள நிலவரத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
இன்றைய செய்திகள்: 08 ஏப்ரல் 2026, புதன்கிழமை
08/04/2026 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 08/04/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இலங்கை: ஏற்றம் காணும் விலைகள், திண்டாடும் மக்கள்
08/04/2026 Duración: 08minமத்திய கிழக்கு யுத்த நிலையை அடுத்து பிற நாடுகளைப் போலவே இலங்கையிலும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
உரிமை கோரப்படாத பல மில்லியன் டாலர்கள் Medicare rebate: உங்கள் பங்கும் இருக்கலாம்
07/04/2026 Duración: 02minகிட்டத்தட்ட 10 லட்சம் ஆஸ்திரேலியர்கள், Medicare-ரிட மிருந்து கிடைக்க வேண்டிய $272 மில்லியன்களை இன்னும் பெறாமல் உள்ளனர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
போர் குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை முன்னாள் உறுப்பினர் கைது!
07/04/2026 Duración: 02minஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை (ADF) முன்னாள் உறுப்பினர் ஒருவர் போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.